Breaking News
Home / பிற செய்திகள் / வேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு…

வேலூர் மாவட்டம்.. கலெக்டர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது நடவடிக்கை – மத்திய அரசு உத்தரவு…

தமிழ்நாடு, ஆந்திரா மாநிலம் எல்லையில் சுவர் எழுப்பிய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் மீது மக்கள் செய்திமையம் மத்திய அரசின் (Department of personnel and training) ஆதாராங்களுடன் புகார் அனுப்பியது. மத்திய அரசு, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தமிழக தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.

   கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அத்திவாசியான பொருட்களை ஏற்றிக்கொண்டு  வரும் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைக்கு செல்லும் டிரக்குகள் மாநிலத்துக்கு, மாநில செல்ல மத்திய அரசின் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது.

 ஆந்திரா, கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், சிமெண்ட், கிரானைட் கற்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் இந்த சோதனை சாவடிகள் வழியாக தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தது.

 இந் நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் வேலூர் மாவட்டத்தில் தமிழக – ஆந்திரா எல்லையில்  குடியாத்தம் அருகே உள்ள சைனகுண்டா சோதனை சாவடி மற்றும் பொன்னை  ஆகிய இரண்டு சோதனை சாவடிகளில்   3 அடி உயரம், 4 அடி அகலம், 30 மீட்டர் நீளம் கொண்ட சுவர் எழுப்பினார்.

  கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் உள்ளே வருவதை தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு சோதனை சாவடிகள் மட்டும் தான் மூட்டப்பட்டுள்ளதாகவும், மற்றவை வழக்கம் போல திறந்திருக்கும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.

  வேலூர் மாவட்டத்தில் தமிழக – ஆந்திர எல்லையில் , ஆந்திரா மாநிலத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது  என்று ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்ட நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது  இதனை தொடர்ந்து தமிழக – ஆந்திர எல்லையில் அமைக்கப்பட்ட  இரண்டு தடுப்புச்சுவர்களும் அகற்றப்பட்டது.

 மத்திய, மாநில அரசின் அனுமதி இல்லாமல் இரு மாநிலங்களின் எல்லையில் தடுப்புச் சுவர் கட்டிய வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் மீது மக்கள்செய்திமையம் புகாரின் பேரில், தலைமைச் செயலாளருக்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.

  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்க்கு மக்கள்செய்திமையம் புகாரின் பேரில் மத்திய அரசு பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது.

 ஆனால்  தலைமைச் செயலாளர்  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மத்திய அரசின் பரிந்துரையின்படி நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் மீது  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

திருவள்ளூர் மாவட்டம்… பழனிச்சாமி முதல்வர் என்றால்- நானும் முதல்வர் தான்… Dr அரசியின் ஊழல் தாண்டவம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் டாக்டர் அரசி,  பழனிச்சாமி தமிழக முதல்வர் என்றால், நானும் முதல்வர் தான் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *