Breaking News
Home / பிற செய்திகள் / வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய- அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- DO WELL சபேசன் எங்கே?…

வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய- அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் நீக்கம்- DO WELL சபேசன் எங்கே?…

உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், சில நாட்களுக்கு முன்பு ஒரங்கப்பட்டுள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சர் பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்ததாக கோவையில் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

  உள்ளாட்சித்துறை அமைச்சரின் நிழல் உதவியாளராக நகராட்சி நிர்வாகத்தின் வேலூர் மண்டல பொறியாளர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். 

    வருமான வரித்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கீழ்க்கட்டளையில் DO WELL ASSOCIATES உரிமையாளரும், நகராட்சிகளில் ஒப்பந்தம் எடுக்கும் சபேசன் வீட்டில் 28.3.19ல் நடந்த அதிரடி ரெய்டில் ரூ14.21கோடி சிக்கியது. விசாரணையின் செல்போன் சிணுங்கியது. செல்போனில் அமைச்சரின்  நிழல் உதவியாளர்  சரவணன்  செல்போனில் வந்தார். சபேசன் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது தெரியாமல் உளறிக் கொட்டினார். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு காரில் ஏற்றும் போது சபேசன் மயங்கி விழுந்துவிட்டார்.

 அடுத்த சில நிமிடங்களில் அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனின் ஆர்.ஏ.புரம் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் அதிரடியாக நுழைந்த போது, சரவணன் ரூ7 இலட்சம் இலஞ்சம் வாங்கிகொண்டு இருந்தார். சரவணன் வீட்டில் ரூ70இலட்சமும், இலஞ்சம் வாங்கிய தொகை ரூ 7இலட்சத்தையும் சேர்த்து  மொத்தம் ரூ77 இலட்சம் கைப்பற்றப்பட்டது.     

    அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணனின் ஆர்.ஏ.புரம் வீட்டில் ரூ77இலட்சம் ரெய்டில் சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை  தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கு, வருமான வரித்துறை கடிதத்தின் பேரில் தலைமைச் செயலாளர் நோட் பைல்  அனுப்பினார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும் தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது.

   நகராட்சி நிர்வாக ஆணையருக்கும், கோவை மாநகராட்சி ஆணையருக்கும்  நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் அலுவலகம் கடிதம் அனுப்பி உள்ளது.  ஆனால் நிழல் உதவியாளர் சரவணன் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யாமல், சரவணனை காப்பாற்ற முயற்சி நடக்கிறது. நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், சரவணனை கோப்பை எடுத்து, தன் அறையில் பாதுகாப்பாக வைத்துக்கொண்டார்.

 நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், சரவணனின் வருமானவரித்துறை கோப்பை அழித்துவிட்டதாக தெரிகிறது. உதவி பொறியாளர் சரவணனை, பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் சார் என்றுதான் அழைப்பார்..

   கோவை மாநகராட்சி  உதவி ஆணையர்(நிர்வாகம்) சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோடி கடிதம் எதுவும், தமிழக அரசிடமிருந்து பெறப்படவில்லை என்று தகவல் அளித்துள்ளார்..

 இந் நிலையில் சரவணன், அமைச்சரின் நிழல் உதவியாளர் பதவியலிருந்து ஒரங்கட்டுப்பட்டுள்ளார். அமைச்சர் பெயரில் பல கோடி வசூல் செய்ததாக, விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

 அமைச்சரின் நிழல் உதவியாளராக வேலூர் மண்டல பொறியாளர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

  உள்ளாட்சித்துறை அமைச்சரிடமிருந்து ஒரங்கட்டுப்பட்டு, விசாரணை வளையத்தில் இருக்கும் சரவணின் பினாமி நிறுவனங்களின் பட்டியலை நாளை வெளியிடப்படும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *