Breaking News
Home / பிற செய்திகள் / நகராட்சி நிர்வாகம்… சாலையோர சிறு வியாபாரிகளுக்கு- ரூ14.63கோடி நிவாரணம்… உங்கள் நகராட்சியில் கொடுத்தார்களா?…

நகராட்சி நிர்வாகம்… சாலையோர சிறு வியாபாரிகளுக்கு- ரூ14.63கோடி நிவாரணம்… உங்கள் நகராட்சியில் கொடுத்தார்களா?…

       நகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகள், மாநகராட்சிகளில் சாலையோர சிறு வியாபாரிகள்க்கு நிவாரணத் தொகையாக ரூ1000 கொடுக்கப்பட்டதற்கு ரூ14,64,43,000/-(ரூ14.63கோடி) செலவானதாக கோப்புகளில் உள்ளது..

  உங்கள் ஊரில் உள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளில் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு கிடைத்ததா..இதோ..மினி பட்டியல்…

  1. பெரு நகர சென்னை மாநகராட்சி – 30,000 சிறுவியாபாரிகள்-  ரூ3கோடி
  2. கோவை மாநகராட்சி – 10,208 சிறு வியாபாரிகள் –ரூ1,02,08,000(ரூ.1.02கோடி)
  3. மதுரை மாநகராட்சி – 12,486 சிறு வியாபாரிகள் – ரூ1,24,86,000(ரூ1.24கோடி)
  4. புதுக்கோட்டை நகராட்சி – 490 சிறு வியாபாரிகள் – ரூ4,90,000
  5. பூந்தமல்லி நகராட்சி – 216 சிறு வியாபார்கள் – ரூ2,16,000
  6. தூத்துக்குடி மாநகராட்சி – 300 சிறு வியாபாரிகள் –ரூ3,00,000
  7. சேலம் மாநகராட்சி – 4296 சிறு வியாபாரிகள் – ரூ42,96,000
  8. தாம்பரம் நகராட்சி -2234 சிறு வியாபாரிகள் – ரூ22,34,000
  9. திருவேற்காடு நகராட்சி – 160 சிறு வியாபாரிகள் – ரூ1,60,000
  10. திருச்சி மாநகராட்சி – 3774 சிறு வியாபாரிகள் – ரூ37,74,000
  11. திருவள்ளூர் நகராட்சி – 453 சிறு வியாபாரிகள் – ரூ4,52,000
  12. காஞ்சிபுரம் நகராட்சி – 1408 சிறு வியாபாரிகள் – ரூ14,08,000
  13. பல்லவபுரம் நகராட்சி – 590 சிறுவியாபாரிகள் – ரூ5,90,000
  14. மறைமலைநகர் நகராட்சி – 370 சிறு வியாபாரிகள் – ரூ3,70,000
  15. செம்பாக்கம் நகராட்சி – 154 சிறு வியாபாரிகள் – ரூ,1,54,000
  16. ஆவடி மாநகராட்சி – 484 சிறு வியாபாரிகள் – ரூ4,84,000
  17. பம்மல் நகராட்சி – 144 சிறு வியாபாரிகள் – ரூ1,44,000
  18. திருநெல்வேலி மாநகராட்சி – 1290 சிறு வியாபாரிகள் – ரூ12,90,000
  19. வேலூர் மாநகராட்சி – 3446 சிறு வியாபாரிகள் – ரூ34,46,000
  20. திருவள்ளூர் நகராட்சி – 452 சிறு வியாபாரிகள் –ரூ4,52,000

இப்படி முதல் தடவை நிவாரணம் 10,58,53(10.58 இலட்சம்), இரண்டாவது தடவை நிவாரணம் 4,05,90(405 இலட்சம்) என 14,64,43 சிறு வியாபாரிகளுக்கு ரூ14,64,43000(ரூ14.64கோடி) நிவாரணம் கொடுத்துள்ளதாக கோப்புகளில் உள்ளது.

 உங்கள் ஊரில் உள்ள சிறு வியாபாரிகளுக்கு ரூ1000 நிவாரணம் கிடைத்ததா அந்த பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் என்று விசாரணை செய்து, மக்கள்செய்திமையத்துக்கு தெரிவிக்கலாம்.. 9840831914 என்ற செல்போன் எண்ணில் தொடர்புக்கொள்ளலாம்..

  • மக்கள்செய்திமையம் ஆய்வு செய்த வகையில் 50 சதவிகிதம்  சாலையோர வியாபாரிகளுக்கு முதலில் ரூ1000 நிவாரணம் கொடுப்பதே தெரியவில்லை.
  • பல சாலையோர வியாபாரிகள் பெயர் எழுதிக்கொண்டு போனார்கள்.. ஆனால் கொடுக்கவில்லை.
  •  ஒரு சில சாலையோர வியாபாரிகள் ரூ600 கொடுத்ததாக புலம்பினார்கள்..

 சாலையோர சிறு வியாபாரிகள் வயிற்றில் அடித்து, நகராட்சி அதிகாரிகள் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமா?

Comments

comments

About mani bharathi

Check Also

வாக்குபதிவு இயந்திரத்துக்கு பதிலாக- வாக்கு சீட்டு முறையை செயல்படுத்த- மக்கள்செய்திமையம் கையெழுத்து இயக்கம்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD வாக்கு பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்கு பதிவு சீட்டு முறையை செயல்படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *