
டாக்டர் பி.சந்திரமோகன் ஐ.ஏ.எஸ், சம்புகல்லோலிகர் ஐ.ஏ.எஸ் இருவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர். மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், தமிழில் பேசுவார்கள், எழுதுவார்கள், இந்தி மொழிக்கு எதிரானவர்கள் என்ற விளக்கம் நமக்கு கிடைத்தது மகிழ்ச்சி..
ஆனால் வருவாய் நிர்வாக மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றாலும், எனக்கு தெரிந்தவரை தமிழில் பேச மாட்டார். ஆங்கிலம், தெலுங்கில்தான் பேசுவார்
தமிழக அரசின் அதிகாரமையத்தில் வலம் வரும் செயலாளர்கள், தமிழ், ஆங்கில தெரிந்தாலும் இந்தியில்தான் பேசிக்கொள்வார்கள். அந்தந்த துறை அதிகாரிகளிடம் கோப்புகள் தொடர்பாக பேசும் போதுதான் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அரசு கோப்புகள் அனைத்திலும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுவார்கள், குறிப்பு எழுதுவார்கள். கீழே உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கூட தமிழில் எழுத தெரியாது…ஏன்…தமிழக அரசு ஆணையின் படி தமிழில் கையெழுத்து போட தெரியுமா என்பதே கேள்விக்குறிதான்…
இப்படி இந்தி பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் தமிழக அரசு சிக்கி உள்ளது என்பதுதான் உண்மை..
- பங்கஜ்குமார்பன்சால் ஐ.ஏ.எஸ் – தமிழ்நாடு மின்சாரவாரிய சேர்மன் மற்றும் ஆணையர் நில நிர்வாகம்.
- சஜ்ஜன் சிங்ராசவான் ஐ.ஏ.எஸ் நுகர்பொருள் மற்றும் நுகர்வோட் பாதுகாப்பு ஆணையர்
- ஜக்மோக்ன்சிங் ராஜீவ் ஐ.ஏ.எஸ் நில சீர் திருத்தம்
- சந்திரகாந்த்பி.காம்பளே ஐ.ஏ.எஸ் – பவர்பின் பைனான்ஸ்
- கிரிலோஷ்குமார் ஐ.ஏ.எஸ் டாஸ்மாக்(கர்நாடகம்)
- சுன் சோங்கம் ஜடக் சிரு ஐ.ஏ.எஸ் வேளாண்மை விளைபொருள் ஆணையர்
- எம்.சாய்குமார் ஐ.ஏ.எஸ் முதல்வரின் முதன்மை செயலாளர்(ஹைதராபாத்)
சுன் சோங்கம் ஜடக் சிரு ஐ.ஏ.எஸ் வேளாண்மை விளைபொருள் ஆணையர் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆங்கிலம் கூட தெரியாது. வேளாண்மை விளை பொருள் துறையை சீரழித்துவிட்டார் என்பது உண்மை.
தமிழை தாய் மொழியாக கொண்ட பல நேர்மையான, திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரங்கட்டுப்பட்டுள்ளார் என்பதை நினைக்கும் போது, அதிர்ச்சியாக இருக்கிறது..
தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ் எதைபற்றி கவலைப்படாமல், இந்தி பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதுதான் வேதனையாக இருக்கிறது…