Breaking News
Home / பிற செய்திகள் / தமிழக அரசின்… அதிகாரமையத்தில் வலம் வரும்- இந்தியில் பேசும்- ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

தமிழக அரசின்… அதிகாரமையத்தில் வலம் வரும்- இந்தியில் பேசும்- ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..

தமிழக அரசின் அதிகாரமையத்தில் வலம் வரும் செயலாளர்கள், தமிழ், ஆங்கில தெரிந்தாலும் இந்தியில்தான் பேசிக்கொள்வார்கள்.  அந்தந்த துறை அதிகாரிகளிடம்  கோப்புகள் தொடர்பாக  பேசும் போதுதான் ஆங்கிலத்தில் பேசுவார்கள். அரசு கோப்புகள் அனைத்திலும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுவார்கள், குறிப்பு எழுதுவார்கள். கீழே உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கூட தமிழில் எழுத தெரியாது…ஏன்…தமிழக அரசு ஆணையின் படி தமிழில் கையெழுத்து போட தெரியுமா என்பதே கேள்விக்குறிதான்…

 இப்படி இந்தி பேசும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் தமிழக அரசு சிக்கி உள்ளது என்பதுதான் உண்மை..

  1. ஆதி திராவிடர் நலத்துறை செயலாளர்  ஒட்டம் டை ஐ.ஏ.எஸ்
  2. வேளாண்மைத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்
  3. கூட்டுறவு, உணவு மற்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை

                              செயலாளர் தயானந்த கட்டாரியா ஐ.ஏ.எஸ்

  • சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சந்தீப் சக்ஸ்சேனா ஐ.ஏ.எஸ்
  • வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் ராஜேஷ் லகானி ஐ.ஏ.எஸ்
  • தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ்
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை ஹர்மந்தர் சிங் ஐ.ஏ.எஸ்
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா ஐ.ஏ.எஸ்
  •  ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ்
  • சுற்றுலா மற்றும் இந்து அற நிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ்
  • போக்குவரத்துத்துறை செயலாளர் தர்மேந்திரபிரதாப்யாத்வ் ஐ.ஏ.எஸ்
  • பள்ளிக் கல்வித்துறை செயலாளர்  தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ்
  • கைத்தறித்துறை செயலாளர் சம்புகல்லோலீகர் ஐ.ஏ.எஸ்
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திரரெட்டி ஐ.ஏ.எஸ்
  • பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிறப்பட்டோர் நலத்துறை செயலாளர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்..

அதிமுக அரசு முதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை  அரசின் முக்கிய துறைகளின் செயலாளராக நியமிக்கலாமே?

   தமிழக அரசின் அதிகார மையத்தை வட இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது சரியா.. நியாயமா?

Comments

comments

About mani bharathi

Check Also

வாக்குபதிவு இயந்திரத்துக்கு பதிலாக- வாக்கு சீட்டு முறையை செயல்படுத்த- மக்கள்செய்திமையம் கையெழுத்து இயக்கம்…

MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PVT LTD வாக்கு பதிவு இயந்திரத்துக்கு பதில் வாக்கு பதிவு சீட்டு முறையை செயல்படுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *