
கொரோனாவில் ரூ500கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. கொரோனா கொள்ளைகளை மறைக்கவும், 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு புரட்சித் தலைவி காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் அப்பாவி மக்களை ஏமாற்ற அதிகாரிகள் ஆலோசனையின் பேரில் இந்த காப்பீட்டுத்திட்டம் செயல்பாட்டுக்கு வருகிறது..
முதல் கட்டமாக கிராம பஞ்சாய்த்து மற்றும் பேரூராட்சிகளில் புரட்சித் தலைவர் காப்பீட்டுத்திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம் இந்த பணிகளை தொடங்கியுள்ளது.
பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
The above district AD,EO and computer operator are advised to attend the meeting in their respective offices without fail. This meeting is conducted by Women Development corporation regarding selection of beneficiaries Under PURATCH THALAIVI LIC SCHEME..
Other districts links will be issued shortly..
முதல் கட்டமாக 55 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ10 இலட்சத்துக்கு காப்பட்டு செய்யப்படும். இதற்கான பிரிமியத் தொகையை அரசு செலுத்திவிடும்.
2021 சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு, புரட்சித் தலைவி காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துகொள்ளும் வகையில் மக்களை ஏமாற்ற இப்படி பல புதிய திட்டங்களை செயல்படுத்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் திமுக தலைமையிலான எதிர்கட்சிகள், அதிமுக அரசின் ஊழல்களை மக்களில் கொண்டு செல்லவில்லை. 1996ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 1991-96 ஜெ ஆட்சியில் நடந்த ஊழல்களை, கிராம பஞ்சாய்த்து அளவில் கொண்டு சென்ற காரணத்தால் அதிமுக அரசு தோல்வியடைந்தது.
ஆனால் தற்போது அதிமுக அரசின் ஊழல்கள் மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்பதுதான் உண்மை..
திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதிமுக அரசின் ஊழல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாவிட்டால், அதிமுக 60-70சட்டமன்றத் தொகுதிகளில் சுலபமாக வெற்றி பெற்றுவிடும்..