
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியின் அலமாதி, திருக்கண்டலம், பென்னகர்பேட்டை பகுதிகளில் சட்ட விரோதமாக, 50 அடிக்கு மேல் ஆழம் வரை தோண்டி சவுடு மண் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
சில மாதங்களுக்கு தமிழக அரசு நீர் நிலைகளில் விவசாயிகள் தங்கள் நிலத்தை மேம்படுத்த, இலவசமாக சவுடு மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை சட்ட விரோதமாக பயன்படுத்தி சோழவரம் ஏரியை மொட்டையடித்துவிட்டார்கள். சோழவரம் ஏரியில் எந்த பக்கம் பார்த்தாலும், 50 அடி பள்ளமாகதான காட்சியளிக்கிறது..

சோழவரம் ஏரியில் சவுடுமண் எடுக்கும் மாபியா கும்பல், நாங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ஐ.ஏ.எஸ்யின் கணவர் ரவிக்குமார் பின்னணியில்தான் எடுக்கிறோம் என்கிறார்கள்..
திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ்தான் பதில் சொல்ல வேண்டும்..
சோழவரம் ஏரியில் சட்ட விரோதமாக சவுடு மண் கொள்ளையடிக்கு மாபியா கும்பல் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் ஐ.ஏ.எஸ் நடவடிக்கை எடுப்பாரா?
பார்ப்போம்.. என்ன நடக்கிறது…என்று….