Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சி – மதுரவாயல்.. ஏ.சி சண்முகம் ஆக்ரமித்த 8000சதுர அடி… விலை போன மாநகராட்சி அதிகாரிகள்..

சென்னை மாநகராட்சி – மதுரவாயல்.. ஏ.சி சண்முகம் ஆக்ரமித்த 8000சதுர அடி… விலை போன மாநகராட்சி அதிகாரிகள்..

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 144வது வார்டு மதுரவாயலில் ஏ.சி சண்முகத்தின் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப் பல்கலைகழகம்  சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 8000 சதுர அடி நிலத்தை  அமைச்சர் பெஞ்சுமின் ஆசியுடன் ஆக்ரமித்துள்ளது.

 ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, கூவத்தை ஆக்ரமித்த, ஏ.சி.சண்முகம் கட்டிய பல லட்சம் சதுர அடி இடங்களை இடித்து தள்ளினார்.

 அதே ஏ.சி சண்முகம், அமைச்சர் பெஞ்சுமின் ஆசியுடன் எம்.ஜி.ஆர் நிகர் நிலைப்பல்கலைக் கழகத்துக்கான மீண்டும் கூவத்தை ஆக்ரமித்து கட்டிடம் கட்டிவிட்டார்.

  ஆனால் மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஒ.எஸ்.ஆர் இடம் சுமார் 8 ஆயிரம் சதுர அடி வரையில் ஆக்கிரமித்து எம் ஜி ஆர் நிகர்நிலைப் பல்கலைகழத்தின் நிர்வாகம் சர்வ சாரணமாக கட்டிடம் கட்டி வருகிறது.

   தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டினால் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அந்த இடத்திற்கு சென்று பணிகளை தடுத்து நிறுத்தி கட்டிடம் கட்டும் நபர் மீது காவல்துறை மீது வசம் புகார் அளிப்பார்கள். மாநகராட்சி அதிகாரிகள் எம் ஜி ஆர் நிகர்நிலைப் பல்கலைகழத்திற்கு ஆதரவாக செயல்படுவது மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

  மதுரவாயல், நொளம்பூர், ஆலப்பாக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ஆளும்கட்சி நிர்வாகிகள் தனியாருக்கு தாரைவார்த்துள்ளனர்.என சென்னை மாநகராட்சி கமிஷனர் தலையீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க முன்வர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..பாவம் அப்பாவி மக்களுக்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகளை ஆக்ரமிப்பார்கள் விலைக்கு வாங்கிட்டார்கள் என்ற சேதி தெரியவில்லை..

 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்ரமிப்புக்கு ஆதரவாக செயல்படுவதை பார்க்கும் போது, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திடம் விலை போய்விட்டார்கள்  என்பதுதான் உண்மை..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *