Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி- விஜிலென்ஸில் சிக்கிய- ராஜேந்திரன், கவிதா புரோக்கர் அருண்… கைது செய்ய தயக்கம் ஏன்… மக்கள் செய்திமையம் வழக்கு தொடர முடிவு…

திருவேற்காடு நகராட்சி- விஜிலென்ஸில் சிக்கிய- ராஜேந்திரன், கவிதா புரோக்கர் அருண்… கைது செய்ய தயக்கம் ஏன்… மக்கள் செய்திமையம் வழக்கு தொடர முடிவு…

  திருவேற்காடு நகராட்சியில் 02.09.2020 பிற்பகல் 12மணிக்கு அதிரடி நுழையந்த விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் திருமதி கவிதா  மற்றும் லைசென்ஸ் சர்வேயர் கம் புரோக்கர் அருண் மூவரும் சிக்கினார்கள்.

  நகரமைப்பு பிரிவில்  காத்திருந்த முவரும், நகரமைப்பு அதிகாரிகளிடம் இலஞ்சம் கொடுக்கவே பணத்துடன் உட்கார்ந்து இருக்கோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஒருவர் ராஜேந்திரனிடம் பணம் கொடுக்கும் போது, விஜிலென்ஸ் சிக்கினார்கள். பணம் பரிமாற்றம் சி.சி.டி.வி பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறகு ஏன் விஜிலென்ஸ் அதிகாரிகள் ராஜேந்திரனை கைது செய்யவில்லை..

 03.09.2020ல் நகரமைப்பு ஆய்வாளர் கவிதா, நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன் இருவர் வீட்டிலும் விஜிலென்ஸ் அதிகாரிகள் செய்த ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளது.

  நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவுக்கு எட்டு வீடுகள் உள்ளது. நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனுக்கு ரூ100கோடிக்கு சொத்து உள்ளது.

 லைசென்ஸ் சர்வேயர் கம் புரோக்கர் அருண், வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அருண் சொந்த ஊரான சிதம்பரத்தில் பல சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

 கருமாரியம்மன் நகர், வெல்பேர்பள்ளி அருகே மேய்க்கால் புறம்போக்குக்கு நிலத்துக்கு போலி சர்வே எண், போலி பட்டாவுக்கு லதா ஆசைதம்பி பெயரில் அப்ரூவல் கொடுத்தார் நகரமைப்பு ஆய்வாளர் கவிதா.

 சி.எம்.டி.ஏ அப்ரூவலை ரத்து செய்ய கடிதம் அனுப்பியும், அப்ரூவல் ரத்து செய்யப்படவில்லை. ஆணையர் சித்ரா கையெழுத்தை போட்டு, பல அப்ரூவல்கள் கவிதா கொடுத்துள்ளது, விஜிலென்ஸ் ரெய்டியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனின் வங்கி கணக்குகள் 04.05.2020ல் சோதனை செய்யப்பட்டதில் பல ஆவணங்கள், பண பரிமாற்றங்கள் சிக்கியுள்ளது.

 02.09.2020 அன்று இரவே நகரமைப்பு ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா மற்றும் புரோக்கர் அருண் மூவரை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விஜிலென்ஸ் கைது செய்து இருக்க வேண்டும்.

 விஜிலென்ஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், கவிதா இருவரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். லைசென்ஸ் சர்வேயர் கம் புரோக்கர் அருண் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் கூட்டு சதியின் வழக்கு பதிவு செய்ய வேண்டு்ம் என்று மக்கள்செய்திமையம் விஜிலென்ஸ் இயக்குநருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

 விஜிலென்ஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, தாமதம் ஏற்பட்டால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *