Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி… ராஜேந்திரன், கவிதா வீட்டில்- விஜிலென்ஸ் ரெய்டு… இலஞ்சம் வாங்கு சிசிடிவி பதிவுகள் அம்பலம்..

திருவேற்காடு நகராட்சி… ராஜேந்திரன், கவிதா வீட்டில்- விஜிலென்ஸ் ரெய்டு… இலஞ்சம் வாங்கு சிசிடிவி பதிவுகள் அம்பலம்..

திருவேற்காடு நகராட்சியில் நகரமைப்பு பிரிவில் இலஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின் பேரில் 02.09.2020 பிற்பகல் 12மணிக்கு விஜிலென்ஸ் அதிகாரிகள் குழு திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் அதிரடி நுழைந்தது. நகரமைப்பு பிரிவில் ராஜேந்திரனிடம் பணம் கொடுக்க, பணத்துடன் காத்திருந்த மூவரும் சிக்கினார்கள். மூவரிடம் ரூ2.10 இலட்சம் சிக்கி உள்ளது. ஒருவரிடம் பணம் ராஜேந்திரன் வாங்கும் போது, விஜிலென்ஸ் அதிகாரிகள் நுழைந்தார்கள். பணத்தை பீரோ பக்கம் தூக்கி போடும் போது பணத்துடன் சிக்கினார் ராஜேந்திரன். இதை ராஜேந்திரன் மறுக்கவே, புதிய நபர் என்று டூபாக்கூர் ராஜேந்திரன் கதை சொன்னார். ஆனால்

  சிசிடிவி பதிவு காட்சிகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் பார்த்த போது, அங்கிருந்த மூவரும் பல முறை ராஜேந்திரன், கவிதாவை பார்க்க வந்தது உறுதியாகி உள்ளது. ஒரு சில சிசிடிவி புட்டேஜ்களில் கவிதா, ராஜேந்திரனிடம் பணம் கொடுப்பதும், அதை லைசென்ஸ் சர்வேயர் அருணிடம் கொடுக்கும் பதிவுகளும் விஜிலென்ஸ்யிடம் சிக்கியுள்ளது. ஆச்சி மசாலா நிறுவனம் கட்டும் பள்ளிக்கூடத்துக்கு விதிமுறைகளின் படி சி.எம்.டி.ஏ முதல் கட்ட அனுமதி கொடுத்துள்ளது என்பது விஜிலென்ஸ் ரெய்டில் உறுதியாகி உள்ளது.

 02.09.2020 நள்ளிரவு 1.30 வரை விஜிலென்ஸ் ரெய்டு நீடித்தது.

  விஜிலென்ஸ் அதிகாரிகள் சென்றதும், ராஜேந்திரன், தன் வீட்டுக்கு போன் செய்து, பணம், நகைகளின் இடத்தை மாற்றுங்கள் என்று செல்போனில் பேசினார்.

 உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விஜிலென்ஸ் உயர் அதிகாரிகளை தொடர்புக்கொண்டு, வழக்கு போடுங்கள் கைது செய்தால் நகராட்சி நிர்வாகம் பெயர் கெட்டுவிடும் என்று பேசியதாக உறுதிப்படுத்தபடாத தகவல்கள் வெளியாகி உள்ளது.

 03.09.2020 மதியம் ஒரு மணிக்கு விஜிலென்ஸ் இரண்டு குழுக்கள் ராஜேந்திரன் வீட்டிலும், கவிதா வீட்டிலும் அதிரடியாக ரெய்டு நடத்தினார்கள். இருவர் வீட்டிலும் இரவு 7மணி வரை நடந்த ரெய்டில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளது.

 அதனால் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா இருவரும் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 கவிதா, மேய்க்கால் புறம்போக்குக்கு போலி பட்டா, போலி சர்வே எண் பெயரில் லதா ஆசைதம்பிக்கு அப்ரூவல் கொடுத்த கோப்புகளும் சிக்கியுள்ளது..விரைவில் லதா ஆசைதம்பி அப்ரூவல் ரத்து செய்யப்படும்.

 ராஜேந்திரன் பினாமியாக ஆர்.டி.எம்.ஏ அலுவலகத்தில்  உதவியாளராக பணியாற்றும்பவர் செயல்படுகிறார். அந்த ஊழியரின் மனைவி சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமத்தில் டிராப்ட்ஸ்மேனாக உள்ளது. அந்த வீட்டில் பணம், நகைகளை மட்டும் பாதுகாப்பாக ராஜேந்திரன் வைத்துள்ளதாக தெரிகிறது..

 நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் கவிதா இருவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லைசென்ஸ் சர்வேயர் அருண் சாட்சியாகவும் சிக்கியுள்ளார்.

   திருவேற்காடு நகராட்சி  நகரமைப்பு பரிவில் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி ரெய்டால், தாம்பரம், பல்லவபுரம், செம்பாக்கம், பம்மல், மறைமலைநகர் ஆகிய நகராட்சிகளின் நகரமைப்பு அதிகாரிகளிடம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *