Breaking News
Home / பிற செய்திகள் / திருவேற்காடு நகராட்சி… விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு… சிக்கிய ராஜேந்திரன், கவிதா, அருண்..

திருவேற்காடு நகராட்சி… விஜிலென்ஸ் அதிரடி ரெய்டு… சிக்கிய ராஜேந்திரன், கவிதா, அருண்..

 திருவேற்காடு நகராட்சியில் 02.09.2020 பிற்பகல் விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து, அலுவலகத்தின் கதவுகளை அடைத்தார்கள். வரி கட்ட வந்தவர்களிடம் மட்டும், செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தார்கள்.

 நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரனிடம் இலஞ்சம் கொடுக்க காத்திருந்த மூன்று பேரும் ரூ1.65 இலட்சத்துடன் பிடிப்பட்டார்கள். லைசென்ஸ் சர்வேயராக கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் செய்யும், அருண், நகரமைப்பு ஆய்வாளர் கவிதாவுடன் சிக்கினார்.

ராஜேந்திரன், கவிதா, அருண் மூவர் அணி வீட்டுமனைகள் 20 பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்பு -2, தனி வீடு-191 அப்ரூவல் கொடுத்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்கள்.

  மேய்க்கால் புறம்போக்குக்கு, கவிதா சகோதரி புனிதவதி பூந்தமல்லி தாசில்தாராக இருந்த போது, நத்தம் என்று பட்டா கொடுத்துள்ளார். அதற்கு கவிதா, அருண், ராஜேந்திரன் மூவர் கூட்டணி அப்ரூவல் கொடுத்துள்ளார்கள்.

 அதே போல் கவிதா, கருமாரியம்மன் நகர், வெல்பேர் பள்ளியில் அருகே மேய்க்கால் புறம்போக்குக்கு போலி சர்வே எண்.18/2,18/A, 18/2B என்று சர்வே எண் கொடுத்து லதா ஆசைதம்பிக்கு அப்ரூவல் கொடுத்துள்ளார்.

 பில் கலெக்டர் முத்துராஜ்(ரூ15 இலட்சம் மதிப்புள்ள காரில் தான் வலம் வருவார்) ஆவடி மாநகராட்சியில் அடித்த கொள்ளையில் விஜிலென்ஸில்  சிக்காமல், திருவேற்காடு நகராட்சிக்கு மாறுதல் பெற்று வந்து, விஜிலென்ஸ் அதிகாரியிடம் சிக்கியுள்ளார்..

 நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன் தன் மகன் கார்த்திகேயனை லைசென்ஸ் சர்வேயராக பதிவு செய்துள்ளார்.  திருவேற்காடு, பூந்தமல்லி, தாம்பரம், பல்லவபுரம் ஆகிய நகராட்சிகளில் கார்த்திகேயன் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.

  வானகரம் மீன் மார்கெட் அருகில் கட்டப்படும் பள்ளிக்கூடம் இரண்டுக்கும் சட்டத்துக்கு புறம்பாக விதிமுறைகளை மீறி ராஜேந்திரன் அப்ருவல் கொடுத்துள்ளார்.. இந்த அப்ரூவல் தொடர்பான கோப்புகள் விஜிலென்ஸில் சிக்கியுள்ளது.

 ராஜேந்திரன், கவிதா, அருண், பொறியாளர் நளினி, வருவாய் பிரிவில் பில் கலெக்டர் முத்துராஜ் என திருவேற்காடு நகராட்சியில் இலஞ்சம் வாங்கும் மாபியா கும்பல் விஜிலென்ஸ்யிடம் சிக்கியுள்ளார்கள்..

  முதன் முதலாக திருவேற்காடு நகராட்சி விஜிலென்ஸ் ரெய்டில் பல லட்சம் சிக்கியதோடு, பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

                 விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *