Breaking News
Home / பிற செய்திகள் / வாலாஜாபாத் பேரூராட்சி- செயல் அலுவலர் பிரேமா மீது- சொத்து குவிப்பு வழக்கு… விரைவில் சஸ்பெண்டா?..

வாலாஜாபாத் பேரூராட்சி- செயல் அலுவலர் பிரேமா மீது- சொத்து குவிப்பு வழக்கு… விரைவில் சஸ்பெண்டா?..

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பதவியிலிருந்து 20 நாட்களில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சி பதவியை ரூ20இலட்சத்துக்கு ஏலம் எடுத்த திருமதி பிரேமா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குள் குவித்துள்ளதாக, ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநகத்தில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கிவிட்டது.

 செயல் அலுவலர் திருமதி பிரேமா கும்பகோணம், பொள்ளாட்சி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். நந்தவரம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கானத்தூரில்  1.45 ஏக்கரில் பண்ணை வீடு கட்டியுள்ளார். படப்பையில் 5 ஏக்கரில் பண்ணை வீடும் உள்ளது. இந்த சொத்துக்களுக்கு முறையாக பேரூராட்சிகளின் இயக்ககத்தில் அனுமதி பெறவில்லை.

 அதனால் இந்த சொத்துக்கள், வருமானத்துக்கு அதிகமாக வாங்கிய சொத்துக்களாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

திருமழிசை பேரூராட்சியில் சட்டத்துக்கு புறம்பாக சென்னை பிராப்பர்டீஸ்(CHENNAI PROPERTIES அப்ரூவல் கொடுத்ததில்  ஒரு கோடி இலஞ்சம் வாங்கிய தன் மருமகனுக்கு, பொள்ளாட்சியில் சொத்துக்கள் வாங்கி கொடுத்துள்ளதும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

  மேலும் கொரோனாவில் கிருமி நாசினி, மாஸ்க், என்.95 மாஸ்க் உள்ளிட்டவைகள் கொள்முதல் செய்ததில் பல லட்சம் போலி பில் மூலம் முறைகேட்டிலும் பிரேமா சிக்கியுள்ளார்.

 திருமழிசை பேரூராட்சி செம்பரம்பாக்கம்(முன்னர் நெஞ்சேரி) பி.பி.டி/எஸ். ஒ எண்.39/2019 நாள் 2.4.2019ல் சென்னை ரெசிடென்ஷியல் டெவலப்பர் நிறுவனத்துக்கு வருவாய் கிராம நில அளவை எண். 66/1B Part , 2 A part, 2 B part & 3, 67/1 part, 2 part & 3 part& 68/8, 9A part & 9B part &10 part குடியிருப்பு வீட்டுமனை பிரிவுகளாக, சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி அப்ருவல் கொடுத்துள்ளார் செயல் அலுவலர் பிரேமா..

   இதில் பல லட்சம், இலஞ்ச பணமாக பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் வெளிப்படையாகவே செயல் அலுவலர் பிரேமா சிக்கியுள்ளார்..

 VSKS Aswatha நிறுவனத்துக்கு அடுக்குமாடி குடியிருப்பு அனுமதி அளிப்பதில் நடந்த பேரத்திலும் செயல் அலுவலர் பிரேமா சிக்கியுள்ளார்.

 திட்டக்குடியிலிருந்து, வாலாஜா பேரூராட்சிக்கு செயல் அலுவலர் பதவியை விலை கொடுத்து வாங்கி வந்த திருமதி பிரேமா விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

 பிரேமா சஸ்பெண்ட் செய்யப்படும் போது, பேரூராட்சிகள் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் உள்பட இலஞ்சம் வாங்கிய பல அதிகாரிகளை காட்டி கொடுப்பார்கள் என்பதால், பேரூராட்சி நிர்வாகத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *