Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. தலைமைச் செயலகத்தில்.. முதல்வர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி எங்கே?- அப்பாவி மக்களுக்கு மட்டும் உபதேசமா…

கொரோனா.. தலைமைச் செயலகத்தில்.. முதல்வர் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி எங்கே?- அப்பாவி மக்களுக்கு மட்டும் உபதேசமா…

    சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாட்டில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ZEE எண்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட1 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 18 அவசரகால ஊர்திகள், என மொத்தம் 118 புதிய ஊர்திகளின் சேவையை கொடியசைத்து மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 31.8.2020  துவக்கி வைத்தார்கள்.  இந்த விழாவில் அதிகாரிகளும், பத்திரிகையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை..

 அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட சில அதிகாரிகள் சமூக இடைவெளி இல்லாமல் சூழ்ந்துக்கொண்டு பேசுவது சரியா?

 முதல்வர் நிகழ்ச்சியிலேயே முழுமையாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை ஏன்?

  அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல்  அப்பாவி மக்களுக்கு மட்டும்  சமூக இடைவெளியைப்பற்றி உபதேசம் செய்வது எந்த விதத்தில் நியாயம்….

 மாண்புமிகு முதல்வர்  அவர்கள் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சமூக இடைவெளி செயல்படுத்தினால், அது தமிழக மக்களுக்கு எடுத்து காட்டாக இருக்கும்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *