Breaking News
Home / பிற செய்திகள் / சென்னை மாநகராட்சியை- URBASER SA – SUMEET FACILITIES LTDக்கு – நேந்துவிட்டாச்சா… பின்னணியில் நந்தகுமார் & மகேசன்… ஜால்ரா போடும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

சென்னை மாநகராட்சியை- URBASER SA – SUMEET FACILITIES LTDக்கு – நேந்துவிட்டாச்சா… பின்னணியில் நந்தகுமார் & மகேசன்… ஜால்ரா போடும் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்…

     சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய ஏழு மண்டலங்களில் உள்ள 92 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணி(திடக்கழிவு மேலாண்மை) ஸ்பெயின், இந்தியா கூட்டு நிறுவனமான URBASER SA  and SUMEET FACILITIES LTD PUNE என்ற நிறுவனத்திடம்  டெண்டர் டிரான்பரன்சி விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக,ரூ447கோடிக்கு (மண்டலம் 11,12,14,&15க்கு குப்பைகளை அகற்ற ரூ172.50கோடி(Package –II) & மண்டலம் 9,10,&13(Package –V) குப்பைகளை அகற்றரூ274.50 கோடி) ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

 URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனம் 3000 பேட்டரி வாகனங்களை போதிய இட வசதியை  இல்லாமல்  கொள்முதல் செய்து குவித்துள்ளது.

மந்தைவெளியில் மாநகராட்சியில் லாரி டெப்போவிலிருந்து தினமும் 50க்கு மேற்பட்ட குப்பை லாரிகள், குடி தண்ணீர் லாரிகள், கழிவு நீர் அகற்றும் லாரிகள் 24மணி நேரமும் வந்து போகும்..

 50க்கு லாரிகளை சாலைகளில்  நிறுத்திவிட்டு, URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்தின் பேட்டரி வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமைப் பொறியாளர் நந்தகுமாரும்(பொது), தலைமைப் பொறியாளர் மகேசனும் அனுமதி கொடுத்துவிட்டார்கள்.

கோயம்பேடு மார்க்கெட்டின் ஒரு பகுதி இந்த நிறுவனத்துக்கு தாரை வார்க்க முயற்சியும் நடந்து வருகிறது.

 சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) மகேசன் முவரும் தினமும் அடையாறு மாநகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு, குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES LTD என்ன உதவி செய்ய முடியுமோ, அந்த உதவிகளை செய்துவருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளை மறந்துவிட்டார்கள்.. முழு நேரம் பணியும் குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES LTD நிறுவனத்துக்காக செயல்படுகிறார்கள்.

 அதாவது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், , தலைமைப் பொறியாளர் நந்தகுமார், தலைமைப் பொறியாளர்(திடக்கழிவு மேலாண்மை) மகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சியின் இடங்களையும், குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனத்துக்கு நேந்துவிட்டுவிட்டார்கள்..

 சென்னை மாநகராட்சியிலிருந்து கடந்த 10 ஆண்டுகளில் ஒய்வு பெற்ற இலஞ்சம் வாங்குவதில் கைதேர்ந்த, சென்னை மாநகராட்சியை மொட்டை அடித்த, மாபியா அதிகாரிகளை  குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம், ஊழியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. ஒய்வு பெற்ற மாபியா அதிகாரிகள் கும்பலை, தலைமைப் பொறியாளர் நந்தகுமார்தான், குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனத்துக்கு சிபாரிசு செய்துள்ளார்.

  29.8.2020 அன்று தினந்தந்தி நாளிதழில் 10,000 பேரை நியமிக்க போவதாக விளம்பரம் கொடுத்துள்ளது. 10, 000பேரை  மாதம் ரூ10,000 சம்பளத்துக்கு விலை பேசி வருகிறது.

      மக்கள்செய்திமையம் சட்டத்துக்கு புறம்பாக குப்பை அள்ளும் URBASER SA – SUMEET FACILITIES நிறுவனம்த்துக்கு கொடுக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய, தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறை செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் விரிவான புகார் கடிதம் அனுப்பி உள்ளது.

 மேலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு அனுப்பிய புகாரில் ஊழல் தடுப்பு சட்டத்தின் படி கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரியுள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *