Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…முதல்வருக்கு அல்வா…. ரேசன் கார்டுகளுக்கு- மாஸ்க் வழங்கும் திட்டம் என்னாச்சு…

கொரோனா…முதல்வருக்கு அல்வா…. ரேசன் கார்டுகளுக்கு- மாஸ்க் வழங்கும் திட்டம் என்னாச்சு…

ரேசன் கார்டுகளுக்கு விலை  இல்லாமல் மாஸ்க் வழங்கும் திட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அமைச்சர் உதயக்குமார் மற்றும் அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 மாண்புமிகு முதல்வர் டாக்டர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா, 27.7.2020 அன்று ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 5.8.2020 முதல் சென்னை மாநகராட்சியை தவிர 69.09 இலட்சம் குடும்பங்களுக்கு 4.44கோடி மாஸ்க் விலை இல்லாமல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

 ஆனால் 5.8.2020 முதல் 7.8.2020 வரை ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் வழங்கப்படவில்லை. சோளிங்களிரில் சில பேருக்கு மாஸ்க் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த மாஸ்க்கை இரண்டு காதுகளுக்கு இடையே அணியமுடியவில்லை. அதனால்  உடனடியாக அந்த மாஸ்க்குகள் திரும்ப பெறப்பட்டது.

 ரேசன் கார்டுகளுக்கு 13.48கோடி மாஸ்க், திருப்பூரை சேர்ந்த அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் வழங்கிய மாஸ்க் கோவணத்தை விட கேவலமாக இருந்த காரணத்தால், என்ன செய்வது என்று தெரியாமல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையரகம் தவிக்கிறது.

 முதல்வர் அறிவிப்பை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறது வருவாய்த்துறை. மேலும் மாஸ்க் கொள்முதலுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்தது, சட்ட விரோதம் என்பதால், மாஸ்க் ரேசன் கடைகளில் விலை இல்லாமல் கொடுக்க முடியாமல் அதிமுக அரசு தடுமாறுகிறது என்பது உண்மை..

 வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் கொடுக்கும் திட்டத்தில் ஏமாற்றிவிட்டார், மாஸ்க் தரமில்லாமலும், காதுகளில் மாட்ட முடியாமல் மிக சிறிய அளவில் இருப்பதாக உளவுத்துறை அறிக்கை அனுப்பி உள்ளது.

  திருப்பூரை சேர்ந்த நிறுவனம் 13.48கோடி மாஸ்க் என்றவுடன் கோவணத்தை விட கேவலமாக சப்ளை செய்துள்ளதால், ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  ரேசன் கார்டுகளுக்கு விலை இல்லாமல் மாஸ்க் வழங்கு திட்டத்துக்கு, முதலமைச்சர் நிவாரண நிதியை பயன்படுத்தியது தொடர்பாக மக்கள்செய்திமையம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *