Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…பணக்காரன் படம்- பாஜகவில் கு.க செல்வம்.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்..

கொரோனா…பணக்காரன் படம்- பாஜகவில் கு.க செல்வம்.. அதிர்ச்சியில் ரஜினிகாந்த்..

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவும், ரவுடியுமான கு.க.செல்வம் பாஜகவில் சேர நட்டாவை, நட்டா மனைவியையும் பார்க்க டில்லி சென்றிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தவுடன், நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்தார். டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கவனத்துக்கு கு.க.செல்வத்தின் கட்ட பஞ்சாய்த்து நடவடிக்கைகளை கவனத்துக்கொண்டு போனார்.

 கு.க. செல்வம், ராமசாமி உடையாரின்(சாராய உடையார்) கட்ட பஞ்சாய்த்து தளபதியாக வலம் வந்த போது, ரஜினிகாந்த் நடிக்கும் ஆர்.எம்.வீரப்பனின் பணக்காரன் திரைப்படம் சூட்டிங் தொடங்கி நேரத்தில் கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா பெயரில் கல்யாண மண்டபம் கட்டி, ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என்று இடம் முயற்சி செய்தார். கல்யாண மண்டபம் கட்டுவதற்காக வாங்க போகும் இடத்துக்கு அருகில் தாழ்த்தப்பட்டவருக்கான அரசு நல விடுதி உள்ளது.

 கு.க. செல்வம், நேரடியாக ரஜினிகாந்தை சந்தித்து, உடையார் அனுப்பினார், தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு விடுதி அருகில், ராகவேந்திரா கல்யாண மண்டபம் கட்டக் கூடாது என்று மிரட்டினார். அதனால் இடம் பதிவு செய்ய முடியாமல்  ரஜினிகாந்த் தடுமாறினார். சில லட்சங்கள் பேரமும் நடந்தது.

  ரஜினிகாந்த் கு.க.செல்வம் மிரட்டியதை, ஆர்.எம்.வீரப்பனிடம் சொல்ல, உடல் நலம் சரியில்லாமல் இருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆர், வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசை அழைத்து, ரஜினிகாந்துக்கு உதவும்படி கூறினார். அமைச்சர் திருநாவுக்கரசு நேரடியாக தலையிட்டு கல்யாணம் மண்டபம் கட்ட போகும்  இடம்  பத்திரம் பதிவு செய்ய உதவி செய்தார்.  கல்யாண மண்டபம் கட்ட அனுமதியும் வாங்கி கொடுத்தார்.

 எம்.ஜி.ஆரிடம், ரஜினிகாந்த் கல்யாண மண்டப பிரச்சனை சுமூக முடித்துவிட்டதாகவும், சாராய உடையாரிடமும் இருக்கும் ரவுடி கு.க.செல்வம்தான் ரஜினி மிரட்டி இருக்கான் என்று நடந்ததை திருநாவுக்கரசு கூறினார்.

 கு.க.செல்வத்தை, ராமாவரம் தோட்டத்தில்  பட்டா பட்டியுடன் அடித்து துவைத்துவிட்டார்கள். ராமசாமி உடையாரிடமும், கு.க.செல்வத்தை பற்றி எச்சரித்தார்கள். பிறகு அடி வாங்கிய கு.க.செல்வம்  வளர்மதி மூலம் எம்.ஜி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

  எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், ஜெ அணி, ஜா அணி பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் இருந்த வளர்மதி  போயஸ்கார்டன்  மீது சாணியை கரைத்து வைத்துக்கொண்டு வளர்மதியும், கு.க.செல்வம் வீசினார்கள் என்பது தனிக்கதை..

   ராகவேந்திரா கல்யாண மண்டபம் இடம் விவகாரம் முடிந்து, கல்யாண மண்டபம் கட்ட அனுமதி வாங்கி கொடுத்த அமைச்சர் திருநாவுக்கரசுக்கு பணக்காரன் படம் சூட்டிங்கில் நன்றி சொன்னார் ரஜினிகாந்த்.

  ராகவேந்திரா கல்யாண மண்டபம் கட்ட அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் பணக்காரன் படத்தில் தொடர்புடைய அனைவருக்கும் ஐந்து அடுக்கு எவர்சில்வர் டிபர் கேரியர் வாங்கி கொடுத்தார் ரஜினிகாந்த்.

 ராகவேந்திரா கல்யாண மண்டபம் 14.12.1989ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார்.  அந்த விழாவில் வாழப்பாடி ராமமூர்த்தியும் கலந்து கொண்டார். கல்யாண மண்டப திறப்பு விழாவில் பேசிய ரஜினிகாந்த், இந்த கல்யாண மண்டபம் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.  பணக்காரன் திரைப்படம் 14.1.1990 வெளியானது.

 கு.க. செல்வம் பாஜகவில் சேர்ந்து வளர்ந்துவிட்டால் என்ன செய்வது என்று பழைய சம்பங்களுடன் ஒப்பிட்டு  நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்தார். கு.க.செல்வத்தை பாஜகவில் வளரவிடாமல்  நடிகர் ரஜினிகாந்தே முட்டுகட்டை போட்டுவிடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *