Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…RTI act 2005… பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் –“FECKLESS”.. பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்-“FECKLESS” .. அசோகன் – “PHONY”

கொரோனா…RTI act 2005… பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் –“FECKLESS”.. பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்-“FECKLESS” .. அசோகன் – “PHONY”

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல்துறையின் கீழ் செயல்படும் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி இருவரும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் படி கேட்ட தகவல்களுக்கு பிப்ரவரி 2020 முதல் தகவல் அளிக்கவில்லை. கொரோனா தொற்று நோயால், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் 50சதவிகிதம் அலுவலகத்துக்கு வருவதால், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005க்கு தகவல் அளிக்கவில்லை முடியவில்லை, கேனத்தனமான பதில் அளிக்கிறார்கள்.

  நகராட்சி நிர்வாகத்துறையிலிருந்து ஆர்.டி.ஐ சட்டம் 2005ன்படி பரிந்துரை செய்யும் கடிதங்களை கூட மதிப்பது இல்லை. ஆர்.டி.ஐ மனுக்கள் எல்லாம் குப்பைக் கூடையில் கிடக்கிறது. குப்பைக் கூடையில் கிடக்கும் மனுக்களை போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளது.

 அதே நேரத்தில்  உள்ளாட்சித்துறை அமைச்சர் அலுவலகத்திலிருந்து பரிந்துரை செய்யப்படும் மாறுதல் ஆணைகள் தொடர்பான கோப்புகளில் ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் பரிந்துரையின் பேரில் கூடுதல் இயக்குநர் அசோகன் ஐ.ஏ.எஸ் கையெழுத்து போட்டு, இரவோடு, இரவாக ஆணைகள் வெளியாகிறது. இதற்கு மட்டும் அரசு ஊழியர்கள் பணிக்கு வருகிறார்களா?

 கொரோனாவிலும் 3.8.2020ம் தேதி இரவு 8மணிக்கு பேரூராட்சிகள் இயக்குநரகத்தில் அயல் பணியில் சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்ட திருமதி நளினி, மீண்டும் நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு மாற்றப்பட்டு, திருவேற்காடு நகராட்சிக்கு உதவி பொறியாளராக மாற்றப்பட்டு ஆணை வெளியாகிறது.

 பூந்தமல்லி நகராட்சி ஆணையர் வசந்தி, திண்டிவனம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டு, இரவு 8மணிக்கு ஆணை வெளியாகிறது. ஆனால் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் தகவல் அளிக்க,  ஊழியர்கள் இல்லையாம் கேலிக் கூத்தாக இருக்கிறது..

 இதைவிட கேலி கூத்து என்னவென்றால் ஆவடி மாநகராட்சியிலிருந்து காஞ்சிபுரம் நகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்ட நகரமைப்பு அதிகாரி சுப்புதாய் உயர்நீதிமன்றத்தில் போட்ட வழக்கு, நகராட்சி நிர்வாக ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகத்துறைக்கு தெரியாமல் விசாரணைக்கு வருகிறது என்றால் எந்த இலட்சணத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்படுகிறது என்பதை பார்க்கும் போது, பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் –“FECKLESS” மட்டுமல்ல , ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தகுதி இல்லை என்பது உறுதியாகிறது.

 பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்க்கு எதைப்பற்றி கவலை இல்லை. இயக்குநர் அலுவலகத்திலேயே கல்லாப்பெட்டியை வைத்துவிட்டார். கல்லாப்பெட்டியில் பணம் விழுந்தால், கோப்புகளில் கையெழுத்து போடுகிறார்…பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்–“FECKLESS”என்று கூறுவதைவிட கல்லாபெட்டி என்றே அன்பாக அழைக்கலாம்.

 மத்திய அரசினால்,பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ மதிக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

     பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், பழனிச்சாமி ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி மற்றும்  திருமதி கலைச்செல்விமோகன் ஐ.ஏ.எஸ் ஐவர் அணியின் ஊழல்கள்,  நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக தனி புத்தகமாக விரைவில் வெளியிட மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *