Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா?- குறிப்புக்கோப்பு அம்பலம்…

கொரோனா….ரேசன் கார்டுகளுக்கு மாஸ்க்.. முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் மாஸ்க் கொள்முதல்- ரூ28கோடி சட்டவிரோதமா?- குறிப்புக்கோப்பு அம்பலம்…

   கொரோனாவை கட்டுப்படுத்த 135 நாட்கள் கழித்து, ரேசன் கார்டுகளுக்கு இலவசமாக மாஸ்க் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. மாஸ்க் கொள்முதலுக்கு உரிய நிதியை வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மைத்துறையிலிருந்து பெறாமல், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ28கோடி எடுத்து செலவு செய்திருப்பது சட்டவிரோதமாகும்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 20.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு 135 நாட்கள் கழித்து, 2.08கோடி ரேசன் கார்டுகளுக்கு  6.74கோடி குடும்ப உறுப்பினர்களுக்கு தலா இரண்டு மாஸ்க் என 13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்ய, டெண்டர் கோரப்பட்டது. டெண்டரில் கோவை அமைச்சருக்கு நெருக்கமான  திருப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் கிடைக்கும் வகையில் டெண்டர் விதிமுறைகளில் புதிய கண்டிசன்கள் சேர்க்கப்பட்டது. திருப்பூரை சேர்ந்த நிறுவனமும் ஒப்பந்தப்படி ஜூலை கடைசி வாரத்தில் மாஸ்க் சப்ளை செய்யவில்லை.

 அதனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அறிவிப்பின்படி ஆகஸ்டு 5ம் தேதி தமிழகத்தில் எந்த பகுதியிலும் விலை இல்லாத மாஸ்க் ரேசன் கார்டுகளுக்கு கொடுக்கப்படவில்லை. டோக்கன் வைத்துக்கொண்டு மக்கள், ரேசன் கடைகளுக்கு செருப்பு தேய அலைந்ததுதான் மிச்சம்..

  13.48கோடி மாஸ்க் கொள்முதல் செய்ய, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ28கோடி செலவு செய்யப்பட்டுள்ளது சட்டவிரோதம் என்பதில் சந்தேகம் இல்லை. கோப்புகளில் உள்ள வார்த்தைகள் அப்படியே…

 13,48,31,478 cloth mask for supply to the family members 2,08,23,076 ration card holders in the state. It is also informed that the above expenditure may be met from the Chief ministers public relief fund என்று கோப்புகளில் தெளிவாக உள்ளது(கோப்புகளில் நகல் வெளியிடப்பட்டுள்ளது)

 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மாஸ்க் கொள்முதலுக்கு ரூ28கோடி செலவு செய்துள்ளது, சட்ட விரோதமாகும்.

  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளிப்பவர்களுக்கு, வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, செலவு செய்யப்படும் நிதிகளுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

  அந்த விதிகளில் எந்த சூழ்நிலையிலும், மாஸ்க் கொள்முதலுக்கு நிதி  ஒதுக்கீடு செய்ய முடியாது. முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மாஸ்க் கொள்முதலுக்கு ரூ28கோடி ஒதுக்கீடு செய்தது சட்ட விரோதமாகும்.

 தமிழக அரசின் நிர்வாகம் துக்ளக் நிர்வாகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளில் ஊழல் தினமும் நடந்துக்கொண்டு இருக்கிறது.

 கொரோனாவில்  நிதியில் கோடிக்கணக்கில் நடக்கும்/நடந்துக்கொண்டு இருக்கும் ஊழலை பார்க்கும் போது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் மேல் இருந்த மதிப்பு, மரியாதை முழுமையாக போய்விட்டது.

 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் என்பதற்கு மக்கள்செய்திமையத்திடம் டன் கணக்கில் ஆதாரம் இருக்கிறது.

 கொரோனா கொள்ளை புத்தகத்தின் இரண்டாவது பாகம் ரூ400கோடி ஊழலுக்கான ஆதாரங்களுடன் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும்.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *