Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 அன்று மாலை பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவில் இல்லத்தில் சந்தித்து பேசினார். பிறகு நான் பாஜகவில் இணையவில்லை என்று பரபரப்பு பேட்டியும் கொடுத்தார் கு.க.செல்வம்..

  1.  மதுரவாயல் காவல் நிலையம் எதிரில் உள்ள பல ஏக்கர் நிலம்(13/1A1 & 13/1A2 உள்ளிட்ட பல சர்வே எண்கள்) வெங்கட்ராமன் அய்யர் சிமெண்ட் பிளாக் உற்பத்தி மற்றும் நான்கு கறவை மாடுகளை வைத்து, பால் கறந்து வியாபாரம் செய்து வந்தார். 2006-11 திமுக ஆட்சியில் ஜாங்கிட் ஐ.பி.எஸ் சென்னை புறநகர் ஆணையராக இருந்த போது,  ஜாங்கிட உத்தரவின் பேரில்,  மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் ஆய்வாளர் பாதுகாப்பில் நான்கு கறவை மாடுகளையும் துடிக்க, துடிக்க வெட்டி போட்டு, மாட்டு இரத்தம் ஆறாக ஓடும் நிலையில் வெங்கட்ராமன் அய்யர் இடத்தை ஆக்ரமித்தார் கு.க.செல்வம். இந்த கொடூர நிகழ்வில் கு.க.செல்வம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  2. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக ஜானகி அணி, ஜெ அணி என்று பிரிந்தது. ஜானகி அணியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கு.க செல்வம், சைதை துரைசாமி மூவரும் இருந்தார்கள். ஆர்.எம்.வீரப்பன் உத்தரவின் படி போயஸ்கார்டன் பங்களா மீது சாணி தெளிக்கும் போராட்டத்தில் கரைத்த சாணியை பிளாஸ்டிக் வாளியில் வைத்துக்கொண்டு வளர்மதி பிளாஸ்டிக் மக்கில் அள்ளி போய்ஸ் கார்டன் சுவர் மீது வீசினார். கு.க. செல்வமும், சைதா துரைசாமியும், சாணி கரைசலை மக்கில் எடுத்து கொடுத்தார்கள். இதை அதிமுகவினர், திமுகவினர் யாரும் மறக்கவில்லை..
  3. சாராய சாம்ராஜ்ஜியத்தின் தளபதி இராமசாமி உடையார் மற்றும் அவருடைய மகன் வெங்கடாஜலம் இருவருக்கும் சப்ளை செய்து வந்தார் கு.க.செல்வம்.
  4. 2006-11 திமுக ஆட்சியில் இராமச்சந்திரா மருத்துவமனை வேந்தர் வெங்கடாஜலம் ஆதரவில் சட்டத்துக்கு புறம்பாக மணல் எடுத்து விற்பனை செய்தார்..மணலில் கோடிகளில் வலம வந்தார்.
  5. வடபழனியில் வக்ப்போர்டு இடத்தை ஆக்ரமித்து, வணிகவளாகம் கட்டி விற்பனையும் செய்துவிட்டார்.

இப்படி சென்னையில் மாபியாவாக வலம் வந்த, கு.க.செல்வம் ஆயிரம்விளக்கு தொகுதியின் திமுக எம்.எல்.ஏவாக வெற்றியும் பெற்றார். சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்து சரித்திர சாதனையும் படைத்துவிட்டார்.

 இவ்வளவு அடுக்கடுக்கான தகுதிகளை கொண்ட கு.க.செல்வத்தை பாஜகவில் எப்படி இணைப்பார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

   கு.க.செல்வம், ஜே.பி நட்டா சந்திப்பில் கு.க.செல்வம் நான்கு எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 50,000 திமுகவினரை பாஜகவில் இணைப்பதாக வாக்குறுதி கொடுத்து வந்துள்ளார்.

   பரம்பரையாக திமுகவை சேர்ந்த பத்திரிகையாளர் அன்பழகன், கைப்புள்ள ஸ்டாலின் என்ற புத்தகம் வெளியிட்டதால், திமுகவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, இன்னும் திமுகவில் அவமானப்படுத்துப்பட்டுக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஆனால் கு.க.செல்வம் போன்ற துரோகிகள், சப்ளை & சர்வீஸ் செய்பவர்களுக்கு திமுகவில் அதிகாரமையத்தில் வலம் வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

 பசு மாட்டை வெட்டி கொன்று இடத்தை ஆக்ரமித்த கு.க. செல்வம் பாஜகவில் இணைய எதிர்ப்பே இல்லையா? வேடிக்கையாக இருக்கிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *