Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…

கொரோனா…சென்னை மாநகராட்சி.. விழிப்புணர்வு வாகனங்களின்- ஊழல் திட்டம்.. நந்தகுமார் சி.இன் கமிசன் புலம்பல்…

பெரு நகர சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, 10க்கு மேற்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடந்தது. ஒவ்வொரு மண்டலத்துக்கு கொரோனா விழிப்புணர்க்காக, கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்ட  சிறப்பு வாகனங்கள் தாரைவர்க்கப்பட்டது. இந்த வாகனங்களால் சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாது என்பதுதான் உண்மை.

  கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கை இல்லாமல், கொரோனா விழிப்புணர்வு பெயரில் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமார் கூட்டணியின் வாகன மெகா ஊழல் திட்டம் இன்று அரங்கேற்றப்பட்டது.

 சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு நாட்கள் கழித்து, ஆய்வின் முடிவு வெளியாகிறது. அந்த ஆறு மற்றும் ஏழு நாட்களில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டவர்களில் பாசிட் உள்ளவர்கள் நடமாடும் இடங்களில் கொரோனா அதிவேகமாக பரவுகிறது என்பதுதான் உண்மை..

  1. Medal 2. Lister metropolis 3. Hi tech 4 . Numbed lab 5 Life cell5. Anderson 7.MGM Chennai 8. Neuberg Ehrlich lab pvt ltd Chennai இப்படி தனியார் ஆய்வு கூடங்களுக்கு தினமும் பல லட்சம் கொரோனா தொற்றை ஆய்வு செய்ய, செலவு செய்யப்படுகிறது. கொரோனா ஆய்வு முடிவுகளை 24மணி நேரத்தில் வெளியிட உரியநடவடிக்கை எடுக்காமல் கொரோனா விழிப்புணர்வு வாகனங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டது, கொரோனா பெயரில் நடக்கும் மெகா ஊழலாகும்..

 சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் நந்தகுமாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆனால் நந்தகுமார் தரப்பில், நந்தகுமார் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக, பொய்யான தகவல்களை பரப்பி விடுகிறார்கள்.. உண்மையில் குளு, குளு அறையில் உட்கார்ந்துக்கொண்டு, விழிப்புணர்வு வாகனங்களுக்கான கமிசன் தொகையை வசூல் செய்துக்கொண்டு இருக்கிறார்.

 உள்ளாட்சித்துறை அமைச்சரால், சென்னை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மிரட்டப்பட்டாலும், இன்று தன் ஆதரவு பொறியாளர்களிடம் பேசிய நந்தகுமார், விழிப்புணர்வு வாகனங்கள் கொள்முதல் என்பது  நான் போட்ட திட்டம், இதில் பிராகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு எவ்வளவு கமிசன் கொடுத்தேன் என்பதை வெளியிடுவேன் என்று பேசியுள்ளார். பிரகாஷ் ஐ.ஏ.எஸ், தலைமைப் பொறியாளர் நந்தகுமாரின் கூட்டணி கொரோனா விழிப்புணர்வு வாகனங்கள் பெயரில் தீட்டப்பட்ட கொரோனா வாகனங்கள் ஊழல் திட்டத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் தலைமையில்  பல அமைச்சர்கள் கலந்துக்கொண்டு செயல்படுத்தினார்கள்..

 கொரோனாவை சென்னையில் கட்டுப்படுத்த இப்படி விழிப்புணர்வு வாகனங்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதை நினைக்கும் போது, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மனசாட்சி இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *