Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… ராஜ்பவன் ஆளுநருக்கு கொரோனா.. ஆளுநர் மாளிகை தகரத்தால் அடைக்கப்படுமா?

கொரோனா… ராஜ்பவன் ஆளுநருக்கு கொரோனா.. ஆளுநர் மாளிகை தகரத்தால் அடைக்கப்படுமா?

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அய்யாவுக்கு, காவேரி மருத்துவமனையில் கொரோனா ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது. கொரோனா ஆய்வு தொண்டையிலிருந்து சளி ஆய்வுக்கு எடுக்கப்பட்டு 30 நிமிடங்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு, கொரோனா உறுதி செய்யப்பட்டது.

 ஆனால் அப்பாவி குடிமகனுக்கு கொரோனா ஆய்வு எடுக்கப்பட்டால் முடிவு வருவதற்கு குறைந்தபட்சம் 5 நாட்களிலிருந்து 7நாட்களாகிறது. கொரோனா தொற்று உறுதியானவுடன், அந்த அப்பாவி வீட்டின் முன்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும், தகரம் மூலம் வீடு அடைக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட  குடும்பம் பல வகைகளில் அவமானப்படுத்துப்படும். மேலும் கிருமி நாசினி என்ற பெயரில் தினமும் எதையாவது தெளிப்பார்கள்..

 சில நேரங்களில் அந்த தெருவே தகரத்தால் அடைக்கப்பட்டு, ஒருவரும் நடமாட முடியாத நிலையை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தும். ஆனால் விஜபிக்கள் என்றால் தகரம் அடைக்கமாட்டார்கள்.. வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வார்களாம்.. என்ன..இது ஜனநாயக நாடா…

  ஆளுநருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், ஆளுநர் மாளிகைக்கு முன்பு தகரம் அடைக்கப்படுமா என்று அதிமுகவுக்கு வாக்களித்த அப்பாவி வாக்காளர்கள் கேள்வி கேட்கிறார்.. பதில் அளிக்க  வேண்டிய பொறுப்பில் ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் மாளிகை நிர்வாகம் பதில் சொல்லுமா?

 சென்னை பெரு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவார்களா?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *