Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…சென்னை மாநகராட்சி… நந்தகுமார் சி.இயின் கொரோனா விருந்து.. ஒரங்கட்டப்படும் நந்தகுமார்.. சிக்கலில் நந்தகுமார் ஆதரவு அதிகாரிகள்..

கொரோனா…சென்னை மாநகராட்சி… நந்தகுமார் சி.இயின் கொரோனா விருந்து.. ஒரங்கட்டப்படும் நந்தகுமார்.. சிக்கலில் நந்தகுமார் ஆதரவு அதிகாரிகள்..

  சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் உள்ளிட்ட 35 பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, தினந்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் செய்தி வெளியானது. உண்மையில் நந்தகுமாருக்கு கொரோனா இல்லை. பின்னணி தகவல் இதோ..

சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் நந்தகுமார் அய்யா, 29.7.2020ம் தேதி சென்னை மாநகராட்சியில் அலுவலகத்தில் கொரோனா விருந்து வைத்தார். அந்த விருந்தில் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.ராஜேஷ் உள்ளிட்ட நான்கு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டார்கள்.

 அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ்தான், மண்டலம் -4,5க்கு மாநகராட்சி ஊழியர்களுக்கு உணவு சப்ளை செய்பவர்.

  திமுக தரப்பிலிருந்து நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் தலைமைப் பொறியாளராக, மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கும் புகழேந்தியை பற்றி, காரசாரமாக அறிக்கை வெளியானது.

 இந்த அறிக்கையின் பின்னணியில், தலைமைப் பொறியாளர் நந்தகுமார் இருப்பதாக, உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு ரகசிய குறிப்பு சென்றது. நந்தகுமார், திமுகவில் ஐக்கியமாகி இருக்கும் கட்டிட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொன்.குமாரின் மச்சான்..

  தலைமைப் பொறியாளர் நந்தகுமாரை, அழைத்த உள்ளாட்சித்துறை அமைச்சர் கடுமையாக எச்சரித்து அனுப்பினார். அதிர்ச்சியடைந்த நந்தகுமார், கோவைக்கு சென்று இரண்டு நாள் ஒய்வு எடுத்துவிட்டு திரும்பினார்.

  29.7.2020ல் கொரோனா விருந்து வைத்த, நந்தகுமாருக்கு, விருந்தில் கலந்துக்கொண்ட அதிமுக மாவட்ட செயலாளருக்கு காய்ச்சல், கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல், வர விருந்தில் கலந்துக்கொண்ட அதிகாரிகள் கொரோனா ஆய்வு செய்த போது, கொரோனா உறுதியானது.

  தலைமைப் பொறியாளர் நந்தகுமார் ஆதரவு பொறியாளர்கள், அதிகாரிகள் யார்..யார் என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில நாட்கள் நந்தகுமார் ஆதரவு அதிகாரிகள், ஒரங்கட்டப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அமைச்சர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

 வளசரவாக்கம் மின்சார சுடுகாட்டு பணிகளை பாண்டியன் டெண்டர் எடுத்திருந்தார். நந்தகுமார் ஆதரவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன்,  பாண்டியன் டெண்டரை ரத்து செய்துவிட்டு, தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுக பிரமுகர் பி.எஸ். மணிக்கு வளசரவாக்கம் மின்சார சுடுகாட்டுப்பணிகளை கொடுக்க முடிவு செய்துள்ளார். மேலும் தலைமைப் பொறியாளர் நந்தகுமார்  ஆதரவாளர்களான சரவணமூர்த்தி, திருநாவுக்கரசு, பத்மநாபன், ராமமூர்த்தி, சரவணன், கே.பி.விஜயகுமார் , தாரணி மற்றும் உமாபதி ஆகிய பொறியாளர்களின் செல்போன், உளவுத்துறை கண்காணிப்பு உள்ளது. சில செயற்பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் விஜிலென்ஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்..

 மழை நீர் கால்வாய் பணி, பஸ் ரூட், ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட சிறப்பு திட்டபணிகளை மறு ஆய்வு செய்யும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 தலைமைப் பொறியாளர் நந்தகுமார் மூலம் இலட்சக்கணக்கில் குவித்த ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ், நந்தகுமாருக்கு எதிர்ப்பா..ஆதரவா?

 பாவம்…. ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடா?- காவல்துறை கொடுத்த ரூ8.50கோடி எங்கே?…

தமிழக அரசின் முதலமைச்சர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு காவல்துறை கொடுத்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *