Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.

 விழுப்புரம் நகராட்சியில் முகக்கவசம் ஊழல் தமிழ்நாட்டில் மெகா ஊழலாக வலம் வருகிறது. 

  1. என் 95 முகக் கவசம் ஊழல்..

 விழுப்புரம் நகராட்சியில் GREEN AGRO ENVIRONMENT SERVICES மதுராந்தகத்தில் உள்ள டூபாக்கூர் நிறுவனத்தில் என்95 முகக் கவசம் ஒன்று  ரூ384 விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம், Venus Safety நிறுவனத்தில்  என்.95 மாஸ்க் ஒன்று  ரூ40க்கும், BYD INDIA PVT LTD இருங்காட்டுக்கோட்டையில் என்.95 மாஸ்க் ஒன்று ரூ130க்கும் தான் கொள்முதல் செய்துள்ளது.

  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண்.391/24.3.2020ல் என்95 மாஸ்க் விலை ரூ65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 ஆனால் விழுப்புரம் நகராட்சியில் என் 95 மாஸ்க் ஒன்று ரூ384க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாஸ்க்கு கமிசன் ரூ300 வரை விழுப்புரம் நகராட்சி அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளது.

 ஆனால் என்.95 மாஸ்க் எத்தனை கொள்முதல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் விழுப்புரம் நகராட்சியில் 31.3.2020 அன்று நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இல்லை.

  • ஒரு தடவை பயன்படுத்தும் முகக் கவசம் ஊழல்..

ஒரு தடவை மட்டு பயன்படுத்தும் முகக் கவசம் விழுப்புரம் நகராட்சியில் ஒன்று ரூ15.33க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் முகக் கவசத்தின் உண்மையான விலை ரூ3மட்டுமே…ஆனால் விழுப்புரம் நகராட்சி தீர்மானத்தில் எத்தனை கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் இல்லை. ஆனால் 30.4.2020ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஒரு தடவை மற்றும் பயன்படுத்தும் மாஸ்க் ஒன்று ரூ10/- என 1000 முகக் கவசம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 1000 முகக் கவசத்திலேயே கமிசன் ரூ7000/- என்பது உண்மை..

  • பளிச்சிங் பவுடர் ஊழல்..

பளிச்சிங் பவுடர் கொள்முதலில் மெகா ஊழல் நடந்துள்ளது. பளிச்சிங் பவுடர் அப்ரூவல் விலை அதிகபட்சமாக ரூ40மட்டுமே. ஆனால் விழுப்புரம் நகராட்சி ஒரு கிலோ ரூ51.92க்கு விலைக்கு சுமார் 20,000 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 ஒரு கிலோவுக்கு ரூ11.92 கமிசன் என்று 20,000 கிலோவுக்கு கமிசன் கணக்கு போட்டு பாருங்கள் அதிர்ச்சியில் மயக்கமாகிவிடுவீர்கள்..

 இப்படி விழுப்புரம் நகராட்சி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொள்முதல் செய்யப்பட்ட மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் மெகா ஊழல் நடந்துள்ளது.

 விழுப்புரம் நகராட்சியில் கொரோனா கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக மக்கள் செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *