Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. திருவேற்காடு நகராட்சி.. லைசால் கொள்முதல் ஊழல்.. ஊழலில் உச்சக்கட்டம்….

கொரோனா.. திருவேற்காடு நகராட்சி.. லைசால் கொள்முதல் ஊழல்.. ஊழலில் உச்சக்கட்டம்….

கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்காக லைசால் கொள்முதலில் திருவேற்காடு நகராட்சியில் மெகா ஊழல் நடந்துள்ளது. மேலும் ஊழலில் உச்சக்கட்டமாக, கொள்முதல் விலை அல்லது ஒதுக்கீடு செய்தது எவ்வளவு என்று இல்லாமல் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லைசால் விலை…

 சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை எண்.391/24.3.2020ன் படி லைசால் விலை  ஒரு லிட்டர் ரூ160/- தான்..

 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை எண்.210/27.4.2020ன்படி லைசால் ஒரு லிட்டர் விலை ரூ200/-

ஆனால் திருவேற்காடு நகராட்சியில் 30.4.2020ல் பொருள் எண்.29ல் 2000 லிட்டர் லைசால் பாலாஜி மார்க்கெட்டிங் அய்யனம்பாக்கம் நிறுவனத்தில் ஒரு லிட்டர்ரூ280க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 ஒரு லிட்டர் கொள்முதலில் வித்தியாசத் தொகை ரூ80 முதல் ரூ120 வரை.. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசாணை கணக்கீல் எடுத்துக்கொண்டால்  லைசால் ஒரு லிட்டருக்கு விலை வித்தியாசாம் ரூ80/-

 திருவேற்காடு நகராட்சியின் தீர்மானம் எண்.29 மற்றும் 31ன்படி லைசால் 4000 லிட்டர் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 வருவாய்த்துறை அரசாணையின் படி ஒரு லிட்டருக்கு கமிசன் ரூ80 என்றால் 4000 லிட்டர் கமிசன் ரூ3,20,000(ரூ3.20இலட்சம்)..

  சுகாதரத்துறை அரசாணையின் படி ஒரு லிட்டருக்கு கமிசன் ரூ120 என்றால் 4000 லிட்டருக்கு கமிசன் ரூ4,80,000/-(ரூ4.80இலட்சம்) லைசாலில் 4000லிட்டர் கொள்முதலில் மட்டும் ஊழல் ரூ3.20 இலட்சம் முதல் ரூ4.80 இலட்சம் வரை…அம்மாடியோவ்…

 இதே பாணியில் மே,ஜூன், ஜூலை மாதங்களில் சுமார் 20,000லிட்டர் லைசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.  ஒரு லிட்டருக்கு ரூ80 ஊழல் கணக்கீட்டால் 20,000 லிட்டருக்கு ரூ16 இலட்சம் ஊழல் நடந்துள்ளது.

  கொரோனா கொள்முதல் அனைத்தும், பில் போடாமல், கணக்கில் வராமல் கொள்ளையடிக்கும் நகராட்சிகள் சட்டம் 1920ன்பிரிவு 15ன் கீழ் லைசால் ஏன் கொள்முதல் செய்யவில்லை.

 கொரோனா தொற்று நோய் விழிப்புணர்வு ஏற்படுத்த முக்கிய இடங்களில் சாமியானா போட செலவு மட்டும் ரூ6 இலட்சமாம்…

 இப்படி மக்கள் பணத்தை கொரோனாவிலும் கொள்ளையடித்தாலும் எப்படி தமிழ்நாடு வளர்ச்சி பாதை நோக்கி போகும்.. மனசாட்சி இல்லாத அதிகார வர்ககம்..

 இதைவிட வேடிக்கை என்னவென்றால் 30.4.2020ல் பொருள் எண்.24 மற்றும் பொருள் எண்.30 உள்ளிட்ட தீர்மானங்களில் விலை இல்லாமல், கொள்முதல் விவரங்கள் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருள் எண்.24ல் சோடியம் ஹைட்ரோகுளோரைடு 1500 லிட்டர் கொள்முதல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் என்ன விலை, நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்ற விவரங்கள் எதுவும் இல்லை. சோடியம் ஹைட்ரோகுளோரைடு ஒரு லிட்டர் விலை அதிகபட்சமாக ரூ7மட்டுமே.. ஆனால் மெகா ஊழல் அரங்கேறியிருக்கும்…

திருவேற்காடு நகராட்சியில் நடந்திருக்கும்/நடக்கும் ஊழல்கள் ஊழலின் உச்சக்கட்டம் என்பதில் சந்தேகம் இல்லை..

  திருவேற்காடு நகராட்சியில் நடந்த பல கோடி கொரோனா கொள்முதல் ஊழல் தொடர்பாக விரிவான புகார் மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுத்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *