Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. திருவேற்காடு… போலி கொரோனா ராஜேந்திரனின்.. ஊழல் ஆட்டம்… கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்க்கு கமிசனா…

கொரோனா.. திருவேற்காடு… போலி கொரோனா ராஜேந்திரனின்.. ஊழல் ஆட்டம்… கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்க்கு கமிசனா…

 ஊழல் செய்வதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ள, திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன் மீது பத்திரிகையாளர் பிரேமை ஜாதி பெயரை சொல்லி திட்டிய புகாரில்  திருவேற்காடு காவல் நிலையத்தில் சி.எஸ்.ஆர் கொடுக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தொடரப்பட்ட வழக்கில் நிருபர் பிரேமிடம் வாக்கு மூலம் பெற்று வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

 இந் நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கிங் இன்ஸ்டியூட்டில் போலி கொரோனா சான்றிதழில் பெற்று சில நாட்கள் ஜாலியாக குளு, குளு வீட்டில் பொழுதை போக்கினார்.

  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் 14.+7=21 நாட்கள் பணிக்கு வரக்கூடாது. ஆனால் 7 நாட்களில் அதாவது 29.7.2020 அன்று திருவேற்காடு நகராட்சிக்கு பணிக்கு திரும்பிவிட்டார் நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன்..

 நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன் மகன் கார்த்திகேயன் மூலம் பல அப்ருவலுக்கு பண பரிமாற்றம் நடந்த காரணத்தால், வழக்கமான காரில் பணிக்கு திரும்பிவிட்டார்..

 தாம்பரம், மறைமலைநகர், பல்லவபுரம், திருவேற்காடு, செம்பாக்கம், பம்மல், உள்ளிட்ட நகராட்சிகளில் பணியாற்றும் நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு கிச்சனுக்கு ரூ40,000இலஞ்சம் வாங்குவதில் ஒரு தொகை நகராட்சி நிர்வாக இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்க்கு கமிசன் கொடுப்பதாக வெளிப்படையாகவே சொல்லுகிறார்கள்..

 திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன், இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்க்கு கொடுப்பதாக வெளிப்படையாகவே சொல்லுகிறார்.

 ஆவடி மாநகராட்சி, நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, கலைச் செல்விமோகன் ஐ.ஏ.எஸ்க்கு சில நாட்களுக்கு முன்பு கமிசன் கொடுத்ததாக கூறுகிறார்..கோயில் பதாகையில் பல அரசு புறம்போக்கு நிலங்களுக்கு அப்ரூவல் தர சொல்லி, கலைச்செல்விமோகன் ஐ.ஏ.எஸ் சிபாரிசு செய்ததாக கணேசமூர்த்தி, ஆவடி மாநகராட்சி ஆணையரை மிரட்டுகிறார். நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் புகழேந்தி பெயரை, கணேசமூர்த்தி, ராஜேந்திரன் இருவரும் சாதாரணமாகவே பயன்படுத்துகிறார்கள்..

  நகரமைப்பு பிரிவில் நடக்கும் ஊழலுக்கு, இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்க்கு தொடர்பு இருக்கிறதா என்பதை நம்மால் உறுதி செய்ய முடியவில்லை.

 ஆனால் நகரமைப்பு பிரிவில் மெகா ஊழல் நடப்பது மட்டும் உறுதியாகிறது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *