Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…வேலூர் மாநகராட்சி… PPE kit விலை ரூ2400/- தாம்பரம் நகராட்சியில் ரூ998/- உண்மையான விலை ரூ290/-மட்டுமே… கருப்பையாராஜாவை சஸ்பெண்ட் செய்…

கொரோனா…வேலூர் மாநகராட்சி… PPE kit விலை ரூ2400/- தாம்பரம் நகராட்சியில் ரூ998/- உண்மையான விலை ரூ290/-மட்டுமே… கருப்பையாராஜாவை சஸ்பெண்ட் செய்…

 கொரோனாவில் வேலூர் மாநகராட்சியில் பி.பி.இ கிட் உள்ளிட்ட அனைத்து கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது.

 வேலூர் மாநகராட்சியில் பி.பி.இ கிட் ஸ்ரீ வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ் திருப்பத்தூர் நிறுவனத்திலிருந்து 416 கிட் ரூ9,98,400க்கு கொள்முதல் செய்து இருக்கிறார்கள். ஒரு பி.பி.இ கிட்டின் விலை ரூ2,400/- இதே போல் வேலூர் மாநகராட்சியின்  மண்டலம் 1&2 மற்றும் மண்டலம் 3&4க்கு தலா 416 கிட்டுக்கு ரூ20 இலட்சம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

 உண்மையில் பி.பி.இ கிட்டின் விலை அரசாணை எண்.177 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் தேதி 1.4.2020ன் படி ரூ290/- தான்… அரசாணை எண்.177ல் 40,000 பி.பி.இ கிட் ரூ1,16,03,200க்கு கொள்முதல் செய்துள்ளார்கள்..

அரசாணை எண்.391/24.3.2020ன்படி பி.பி.இ கிட்டின் விலை ரூ290 தான்.. பிறகு வேலூர் மாநகராட்சியில் பி.பி.இ கிட்2400க்கு கொள்முதல் செய்தார்கள்..

 ஒரு பி.பி.இ கிட்டுக்கு கமிசன்/ஊழல்/முறைகேடு ரூ2100 என கணக்கிட்டால்… மயக்கமே வருகிறதா…

 அதைவிட கேவலம் தாம்பரம் பெரு நகராட்சியில் பி.பி.இ கிட் ரூ998 விலையில் 520 கிட் ரூ5.20 இலட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பி.பி.இ கிட் கொள்ளையடித்த பொறுப்பு ஆணையர் கருப்பையா ராஜா தான் செங்கல்பட்டு மண்டல பொறுப்பு ஆணையர் பதவியை விலைக்கு வாங்கி உள்ளார்..

 பி.பி.இ கிட் கொள்முதல் தொடர்பாக மக்கள்செய்திமையம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் கொடுத்துள்ளது.

 தாம்பரல் பெரு நகராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் கூடிய 3 லேயர் கொண்ட முகக் கவசத்தை ரூ16க்கு 1,23,500 ரூ19.76 இலட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இந்த முகக்கவசத்தில் விலை ரூ3 மட்டுமே,….ஒரு முகக் கவசத்துக்கு ரூ13/-கமிசனில் 1,23,500 முகக்கவசம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

 தாம்பரம் பெரு நகராட்சி கொரோனா கொள்முதலில் ஊழல் செய்துள்ள பொறுப்பு ஆணையராக இருந்த கருப்பையா ராஜாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று புகார் எழுந்துள்ளது..

 பி.பி.இ கிட் மற்றும் முகக்கவசம் கொள்முதல் ஊழல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, மக்கள்செய்திமையம் பொது நல வழக்கு தொடர முடிவு செய்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *