Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா..ஆவடி மாநகராட்சி பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் “PHONY”- நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தியின் ஊழல் ஆட்டம்…

கொரோனா..ஆவடி மாநகராட்சி பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் “PHONY”- நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தியின் ஊழல் ஆட்டம்…

 நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், பேரூரட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி ஐ.ஏ.எஸ் இருவர் அலுவலங்களும் முடங்கி போய் உள்ளது. ஜனவரி 2020 முதல்  29.7.2020 வரை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி அனுப்பிய மனுவுக்கு தகவலே அளிக்கவில்லை.

 கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக கூறி அனைத்து நகராட்சிகளிலும், 525 பேரூராட்சிகளிலும் மெகா ஊழல் தினமும் நடந்து வருகிறது.

   நகராட்சி நிர்வாக ஆணையரகத்திலும், பேரூராட்சிகளில் இயக்குநரகத்திலு மாறுதல், பதவி உயர்வு மட்டும் விலைக்கு விற்கப்படுகிறது.

 ஆவடி மாநகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, தலைமைப் பொறியாளர் புகழேந்தி சிபாரிசில், பல்லவபுரம் நகராட்சியிலிருந்து ஆவடி மாநகராட்சிக்கு மாறுதல் பெற்று வந்து, பணியில் சேர்ந்தார்.

கணேசமூர்த்தி, பல்லவபுரம் நகராட்சியில் பணியாற்றிய போது, ஜமீன்பல்லவபுரத்தில் சரவணாஸ்டோர் திரையரங்கத்துடன் வணிக வளாகம் கட்ட என்.ஒ.சி கொடுத்ததில் மெகா முறைகேடு நடந்துள்ளது, ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் அளிக்கப்பட்டு, கணேசமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது மேல்நடவடிக்கை எடுக்க, அரசு பரிந்துரைக்கப்பட்டது. இந் நிலையில் கணேசமூர்த்தி ஆவடி மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பதவியை விலை கொடுத்து, புகழேந்தி மூலம் வாங்கிவிட்டார்.

 ஆவடி மாநகராட்சியில் பணியில் சேர்ந்த நாள் முதல் கணேசமூர்த்தி அலுவலகத்தில் ஒரு மணி நேரம் மட்டும் இருப்பார். மற்ற நேரங்களில் ஒவ்வொரு ரியல் எஸ்டேட் அலுவலகமாக ஏறி, இறங்கி வசூல் செய்து வருகிறார்.

 ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட கோயில் பதாகையில் மீண்டும் அரசு நிலம், கோயில் நிலங்களுக்கு அப்ரூவல் கொடுக்க, கணேசமூர்த்தி பேரம் பேசி வருகிறார். தலைமைப் பொறியாளர் புகழேந்தி, கணேசமூர்த்தியை பின்னால் இருந்து இயக்கி வைக்கிறார் என்று பரவலாக பேசப்படுகிறது.

 ஆவடி மாநகராட்சியில் காமத்துரையை தொடர்ந்து விஜிலென்ஸில் சிக்க போவது கணேசமூர்த்திதான்…

ஆவடி மாநகராட்சியில் ரூ100 கோடி ஊழல் புத்தகம் வெளியிடும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது. ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று புத்தகம் வெளியாகும்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *