Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா..கொள்ளை அதிமுக அரசின் கொரோனா கொள்ளை ரூ400கோடி…. சுதந்திர தினத்தில் ஊழல் புத்தகம் வெளியிட முடிவு…

கொரோனா..கொள்ளை அதிமுக அரசின் கொரோனா கொள்ளை ரூ400கோடி…. சுதந்திர தினத்தில் ஊழல் புத்தகம் வெளியிட முடிவு…

அதிமுக அரசின் கொரோனா பெயரில் போடப்பட்ட போலி பில்களின் மதிப்பு ரூ400கோடி.. அதற்கான ஆதாரங்களை அனைத்து துறைகளில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் படி சேகரித்துள்ளது.

 அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்படவில்லை. இம் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார ஊழியர்களுக்கு தங்கும் இடம் வசதி, உணவு அளிக்கப்படவில்லை.

ஆனால் 23.3.2020 முதல் 23.06.2020 வரை டாக்டர்கள்,நர்சுகள், சுகாதார ஊழியர்களை மருத்துவமனைக்கு அழைத்து வர செலவுகள் என்ற பெயரில் போடப்பட்ட போலி பில்…

  1. 25.03.2020 -14.4.2020 –ரூ2,05,000
  2. 15.04.2020 -03.05.2020-ரூ2,75,000
  3. 04.05.2020 -17.05.2020 – ரூ2,10,000
  4. 18.05.2020 -31.05.2020 –ரூ2,05,000
  5. 01.06.2020-18.6.2020 –ரூ2,70,000
  6. 19.06.2020-30.06.2020 –ரூ1,80,000

கொரோனா வார்டு அமைக்கப்படாத மருத்துமனையில் இப்படி போலி பில் போடப்பட்டுள்ளது.. இதை யார் கேட்பது?

குடும்ப அட்டைகளுக்கு மாஸ்க் கொடுப்பது என்பது மெகா மோசடி திட்டமாகும்..13,48,31,798 மாஸ்க் கொள்முதல் செய்ய ரூ28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 இது தொடர்பான டெண்டரில் திருப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சாதகமாக, டெண்டர் விதிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் நிறுவனம்தான் விதிமுறைகளை,சட்டத்துக்கு புறம்பாக மாஸ்க் சப்ளை செய்துள்ளது. ஆனால் இன்று மாஸ்க் சப்ளை செய்யப்படவில்லை. ஆனால் மாஸ்க் கொள்முதல் டெண்டரில் தினமும்  ஒரு லட்சம் மாஸ்க் சப்ளை செய்ய வேண்டும் என்று உள்ளது.

 மாஸ்க் கொள்முதலில் நடந்த ஊழல் ஆதாரங்களுடன் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது.

 கொரோனா கொள்ளைக்கான முதல் பாகம் வெளியாகி உள்ளது. இரண்டாவது பாகம் ஆகஸ்டு 15ம் தேதி ரூ400கோடிக்கணக்கான ஊழல் ஆதாரங்களுடன் புத்தகமாக மக்களிடம் வெளியாகும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *