Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… சூதாட்ட பிடியில் நுங்கம்பாக்கம்… 41Aயில் விடுவிக்க சூதாட்ட மாபியாக்கள்..

கொரோனா… சூதாட்ட பிடியில் நுங்கம்பாக்கம்… 41Aயில் விடுவிக்க சூதாட்ட மாபியாக்கள்..

     நடிகர் ஷியாம் POKER GAME GAMLING என்ற சூதாட்ட விடுதியை நுங்கம்பாக்கத்தில் நடத்தி வந்தார்..இந்த சூதாட்ட விடுதியில் 27.7.2020 அன்று இரவு அதிரடியாக ரெய்டு நடந்தது.சிக்கிய சூதாட்ட மாபியாக்கள் 30 நிமிடங்களில் விடுவிக்கப்பட்டார்கள்..

    நடிகர் ஷியாம் நுங்கம்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக நடத்திய GAMLING சூதாட்ட விடுதி Poker லயோலா கல்லூரி எதிரே உள்ள EASDALE ENCLAVE அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது

இந்த சூதாட்ட விடுதியில் அடிக்கடி பணம் பிரச்சனை ஏற்பட்டு அடிதடி வரை சென்றபோதும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அதற்கான பஞ்சாயத்து நடைபெறும் வழக்கமான ஒன்றுதான்.

இதற்கிடையில் நடிகர் ஷியாம் நடத்தும் சூதாட்ட விடுதியில் புதன் கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை தொடர்ந்து சூதாட்டம் நடைபெறுவது வாடிக்கை.

    இதில் பல சினிமா நடிகர் வருவதும் அதனால் ஆந்திரா அழகிகளும் முக்கிய நாட்களில் வருவதும் உண்டு.  இங்கு சூதாட்டம் மற்றும் இல்லாமல் அதை வகையான போதை தரும் அனைத்து வஸ்துக்களும் இடம்பெறுவது வழக்கம். இங்கு பணத்தை இழந்தவர்கள் அதிகம். சென்னை நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் இவ்வளவு நாட்கள் சூதாட்டம் நடைபெறுவதே நுங்கம்பாக்கம் உதவி ஆணையருக்கு தெரியாதா?

இந்த சூதாட்ட விடுதியில் புதன் கிழமை மட்டும் நடிகர் ஷியாம் சொந்தமாக சூதாட்டம் நடத்துவது வழக்கம் இது மதியம் 2 மணிக்கு துவங்கி அடுத்த நாள் காலை 6 மணி வரை நடைபெறும்.

 தற்போது இந்த சூதாட்ட விடுதியின் பங்குதாரராக உள்ள கோபி கிருஷ்ணன் என்பவர் இரட்டிபாக பணம் தருகிறோம் என கூறி பலரிடம் பணம் பெற்று பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

   நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் நடத்திய சோதனையில் அந்த விடுதியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்ன? அந்த விடுதியை ஏன் சீல் வைக்கவில்லை போன்ற கேள்விகள் எழுகிறது. சோதனைக்கு காவல்துறையினர் உள்ளே நுழைந்தவுடன், சூதாட்ட டேபிளில் இருந்த ரூ13 இலட்சம் மாயமானது எப்படி?

  1. ஷியாம் OMRரோடு, செங்கல்பட்டு

2) கோபி கிருஷ்ணன் பஜாஜ் இன்சுரன்ஸ் அரும்பாக்கம்

3) சித்தார்த் (நைட் மார்க்கெட் ரெஸ்ட்டாரன்ட் காதர் நவாஸ்கான் ரோடு)

4) ஆனந்த் (புதிய இயக்குனர்)

5) நந்த கிஷோர்  (வழக்கறிஞர்)

6) பட்டேல் (Tanstic ரெஸ்டாரன்ட்) உட்பட பலர்…

 இப்படி சிக்கிய சூதாட்ட மாபிக்கள் 41A என்ற பெயரில் விடுவிக்கப்பட்டது எந்த விதத்தில் நியாயம்..
 இந்திய குடியரசு தலைவரின் பாராட்டத்தக்கப்ப பணிக்கான காவல் விருது பெற்ற உதவி ஆணையர் முத்துவேல்பாண்டியன்  அய்யா உதவி ஆணையராக பணியில் இருக்கும் போது, இப்படிப்பட்ட  சூதாட்டம் நடக்கலாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்..

  இனியும் உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையராக இருக்கும் வரை சூதாட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதில் உறுதியாக இருப்போம்..

  சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சென்னை மாநகர் முழுவதும் சூதாட்டம் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் மக்கள்செய்திமையத்தின் கனிவான வேண்டுகோள்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *