Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா கொள்ளை … ஊழலுடன் கூட்டணி அமைத்த மீடியாக்கள்.. முரசொலியும் செய்தி வெளியிடவில்லையே?- கிராமங்களில் கொரோனா கொள்ளை புத்தகம்…

கொரோனா கொள்ளை … ஊழலுடன் கூட்டணி அமைத்த மீடியாக்கள்.. முரசொலியும் செய்தி வெளியிடவில்லையே?- கிராமங்களில் கொரோனா கொள்ளை புத்தகம்…

கொரோனா கொள்ளை புத்தகம் அச்சு ஊடகம், டிவி மீடியாக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், செய்திகள் வெளியிடாமல் இன்று வரை 4872 புத்தகம் விற்பனையாகி உள்ளது என்பதை பார்க்கும் போது  மக்கள்செய்திமையத்தை அதிமுக, திமுகவுக்கு வாக்களித்த அப்பாவி மக்கள் விரும்புவதுதான்..

 அச்சு ஊடகங்கள், டிவி மீடியாக்கள் கொரோனா கொள்ளை புத்தகத்தை பற்றிய செய்தியை வெளியிடவில்லை. ஆனால் எதிர்கட்சியாக வலம் வரும் திமுகவின் அதிகாரபூர்வமான நாளேடான முரசொலியும், கலைஞர் டிவியும் கொரோனா கொள்ளை ஊழல் புத்தகத்தில் உள்ள ஊழல் செய்திகளை வெளியிடவில்லையே ஏன்? ஊழலுக்கு எதிராக திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை என்பதுதான் உண்மை.. சிபிஐ, சிபிஎம்யின் ஆதரவு நாளேடுகளிலும்  கொரோனா கொள்ளை புத்தகத்தில் உள்ள ஊழல்கள் வெளியாகவில்லை ஏன்?

 ஊழல் என்றால் திமுக முதல் அனைத்து எதிர்கட்சிகளின் சப்த நாடிகளிலும் அடங்கி போய்விடும் என்பதுதான் உண்மை..

ஆன் லைன் மூலம் ஒரு புத்தகம், இரண்டு புத்தங்களுக்கு, வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி கொரோனா கொள்ளை புத்தகத்தை வாங்கியவர்களின் எண்ணிக்கை 392 பேர்….

 தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, நெய்வேலி, திருப்பூர், கோயம்புத்தூர், கரூர், திருவாரூர், மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் இதுவரை 4000 புத்தகங்களுக்கு ஆர்டர் பெறப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 மேலும் 2765 புத்தகங்களுக்கு ஆர்டர் பல மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 1098 புத்தகங்கள் மக்களிடம் போய் சேர்ந்துள்ளது.

 அச்சு ஊடங்கள், டிவி மீடியாக்கள், திமுகவின் அதிகாரபூர்வமான நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி இவர்களுடன் டி.டி.வி தினகரனின் ஜெயா டிவி ஒத்துழைப்பு இல்லாமல் மக்கள்செய்திமையத்தின் கொரோனா கொள்ளை புத்தகம்  தமிழகம் முழுவதும் கிராமங்களிலும் போய் சேர்ந்து, அதிமுகவின்  ஊழல் ஆட்சிக்கு எதிராக  மக்களின் மனத்தை மாற்ற முயற்சி செய்வது  மக்கள்செய்திமையம் மட்டுமே…

 சுமார் 3000 கொரோனா கொள்ளை புத்தகங்களை 30 முக்கிய  இடங்களை தேர்வு செய்து, தலா 100 புத்தகம் என்று இலவசமாக மக்களிடம் கொடுக்க, மக்கள்செய்திமையம் முடிவு செய்துள்ளது.

   மக்கள்செய்திமையம் மட்டுமே தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்பதில் சந்தேகம் இல்லை…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *