Breaking News
Home / பிற செய்திகள் / மக்கள்செய்திமையம் அன்பழகன் யார்?- டப்ப..டப்ப..வீரப்பா.. எங்கடா வைரவேல்..

மக்கள்செய்திமையம் அன்பழகன் யார்?- டப்ப..டப்ப..வீரப்பா.. எங்கடா வைரவேல்..

திருச்சி மாவட்டம் பூவாளூர் பொன்னம்பலனார், பூவாளூர் தியாகராச செட்டியார் குடும்பத்தை சேர்ந்த அன்பழகனை  திமுகவில் அ,ஆ தெரியாத சிலர் யார் என்று கேட்கிறார்கள். திமுகவின் தீவிர போராட்டங்களில் கலந்துக்கொண்ட நான், கல்லூரி படிப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பெயர் வெளியாவதை தவிர்த்தேன்.

 நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்திய இந்திராகாந்தி, மதுரைக்கு வந்த போது திருச்சி அமெரிக்கன் மருத்துவமனை அருகே கருப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கலந்து கொண்டேன். கண்ணீர்புகைக்குண்டுகள் வீசி, போலீசார் தடியடி நடத்தினார்கள் (அக்டோபர்1977). கோட்டை காவல் நிலைய பதிவேடுகளில் அன்பழகன், பூவாளூர் Bishop Heber college மாணவன் என்று உள்ளது. இப்போது பார்க்கலாம்..

 தலைவர் கலைஞர் நீதிகேட்டு நெடும்பயணம், திருச்செந்தூருக்கு சென்ற போது, தேர்வு எழுதிவிட்டு இரவோடு இரவாக, நடைபயணத்தில் கலந்துக்கொண்டேன். திருச்செந்தூர் என்ற பொதுப்பணித்துறையின் போர்டை பார்த்தவுடன் தலைவர் கோஷம் போடலாமே என்றவுடன், டப்ப..டப்ப.. வீரப்பா.. எங்கடா வைரவேல் என்ற நான் போட்ட கோஷம் , திருச்செந்தூரில் விண்ணை பிளந்தது.

  டப்ப..டப்ப.. வீரப்பா என்ற கோஷத்துக்கு என் கையை பிடித்துக்கொண்டு கோஷம் போட்ட தலைவர் இல்லை. அருகில் இருந்த இரணியல்ரவியும் இல்லை..

 உத்தமர் கோயில் இரயில்வே கேட் கீப்பர்  திமுக வெறியன் தாடி முத்துகிருஷ்ணன், முதல்வர் எம்.ஜி.ஆர் திருச்சிக்கு வந்த போது, இரயில்வே கேட்டை மூடிவிட்டார் என்று, திருச்சி இரயில்வே கோட்ட அதிகாரி கிருஷ்ணன், திருவரம்பூருக்கு மாற்றிவிட்டார்.

 திமுக எம்.பிக்களால் தாடி முத்துகிருஷ்ணனை மீண்டும், உத்தமர் கோயிலுக்கு மாற்ற 8மாதமாக முடியவில்லை. திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்த தலைவர் முத்துகிருஷ்ணனை பார்த்தவுடன் இன்னும் மாறுதல் கிடைக்கவில்லையாஎன்ற ஆவேசத்துடன், அருகில் திமுக எம்.பியை அழைத்து(பெயர் சொல்ல விரும்பவில்லை) சத்தம் போட்டார். இரயில்வே கோட்ட மேலாளர் கிருஷ்ணனை, லேண்ட் லைனில் தொடர்புக்கொண்டு புராணத்தில் கிருஷ்ணன் லீலை செய்வது போல லீலை செய்கிறீர்கள் என்று ஏக வசனத்தில் தலைவர் பேசினார்.

 தலைவர் பூவாளூர் அன்பு இருந்தான் கூப்பிடு என்ற படி, என்னிடம், முத்துகிருஷ்ணனுடன் செல் என்றார். முத்துகிருஷ்ணனுடன் சென்ற நான், மீண்டும் உத்தமர்கோயில் இரயில் ஸ்டேசனுக்கு மாறுதல் ஆர்டர் வாங்கிக்கொண்டு திரும்பினேன். இரயில்வே கோட்ட அலுவலகத்தில் என்ன நடந்தது என்பது தலைவருக்கு தெரியும்..

 இன்று அந்த திமுக வெறியன் முத்துகிருஷ்ணன் திமுகவிலிருந்து ஒரங்கட்டுப்பட்டு, வீட்டின் திண்ணையில் புலம்பியபடி நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். இப்படி திமுகவின் வரலாறே தெரியாத சிலர் திமுகவில் ஆதிக்கம் செலுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

   இப்படி திமுகவில் வளர்க்கப்பட்ட பூவாளூர் அன்பழகனின் மக்கள்செய்திமையத்தின் செய்திகளை முரசொலி வெளியிட தடையும், கொரோனா கொள்ளை புத்தகத்தை தலைவர் வெளியிட தடைவிதிக்கப்பட்டதை கேள்விப்பட்டவுடன் கோபம் வரவில்லை, வேதனையுடன் சிரிப்புதான் வந்தது.

  அதிமுக அரசின் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, பத்திரிகை சுதந்தரத்தை காப்பாற்றி, எதிர்கட்சியாக தமிழகத்தில் வலம் வருவது மக்கள்செய்திமையம் மட்டுமே என்பதுதான் உண்மை.

Comments

comments

About mani bharathi

Check Also

சென்னை மாநகராட்சி- நுங்கம்பாக்கம் மண்டலம்.. பிரகாஷ் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?- சமூக இடைவெளி எங்கே?- அப்பாவிகளுக்கு மட்டும் உபதேசமா?-

சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவு இருக்கிறதா.. இவர்களை வைத்து சென்னை மாநகராட்சி எப்படி செயல்படுகிறது என்ற கேள்விகள்.. சந்தேகங்கள் எழுந்துள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *