Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… பம்மல்.. நகரமைப்பு அதிகாரி நாகராஜனின்- ஊழல் பயோடேட்டா…

கொரோனா… பம்மல்.. நகரமைப்பு அதிகாரி நாகராஜனின்- ஊழல் பயோடேட்டா…

சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் பணியாற்று நகரமைப்பு அதிகாரிகள், நகரமைப்பு ஆய்வாளர்கள் ஒவ்வொரு குறைந்த பட்சம் பினாமி பெயரில் ரூ100கோடி சொத்து வைத்திருக்கிறார்கள். பலர் பினாமி பெயரில் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்.

  பம்மல் நகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக இருக்கும் நாகராஜன், ராமநாதபுரத்தில் பழைய கப்பல்களை உடைக்கும் கம்பெனி ஒன்றில் சூப்பரேசராக ரூ2000 சம்பளத்துக்கு பணியாற்றினார். பிறகு ராமநாதபுரம் நகராட்சியில் கட்டிட ஆய்வாளராக ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்தார். அரசு அதிகாரிகளுக்கு சப்ளை & சர்வீஸ் செய்து,  நிரந்தரமான நாகராஜன் ஆலந்தூர் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளராக பணி மாறுதல் பெற்றார்.

 ஆலந்தூர் நகராட்சியில் ஆணையராக இருந்த தயாளுமூர்த்திக்கு அல்வா கொடுத்து, அப்ரூவலுக்கு இலஞ்சம் வாங்கி குவித்தார் அதோடு சொத்துக்களை வாங்கி குவித்து கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றார்.

  பூந்தமல்லி நகராட்சியில் கோல்டன் ஹோம்ஸ் நிறுவனத்தில் 815 வீடுகள் கொண்ட அடுக்குமாடி  கட்டிடத்திற்கு(64/2012) அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. மூன்றாண்டுகளில் கட்டிடப்பணியை முடிக்க வேண்டும். கோல்டன் ஹோம்ஸ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அனுமதி வழங்கிய போதே கட்டணங்கள் குறைவாக வசூலித்தது தொடர்பாக நகரமைப்பு ஆய்வாளராக இருந்த நாகராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை (ந.க.எண்.366/2011/1 நாள் 15.09.2014) எடுக்க, பூந்தமல்லி நகராட்சி ஆணையராக இருந்த சுரேந்திரஷா நகராட்சி நிர்வாக ஆணையரகத்துக்கு பரிந்துரை செய்தார்.

 மேலும் 3ஆண்டுகளில் கட்டிட பணியை முடிக்காமல், மேலும் அனுமதி பெறாமல் எட்டுமாதம் பணிகள் நடந்தது. இதனால் நகராட்சிக்கு ரூ80இலட்சம் இழப்பு என்று நாகராஜன் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

 இதனால் பதவி உயர்வு கிடைக்காமல் இருந்த நாகராஜன், பூந்தமல்லி நகராட்சி ஆணையராக டிட்டோ இருந்த போது, நாகராஜன் குற்றச்சாட்டு குறிப்பாணை கோப்புகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டது. பம்மல் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் பணியிலிருந்து, தாம்பரம் நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் பணிக்கு மாறுதல் பெற்று சென்றார். ஆணையர் டிட்டோ புண்ணியத்தில் நகரமைப்பு அதிகாரியாக பதவி உயர்வு பெற்று மீண்டும்  பம்மல் நகராட்சிக்கு பணி மாறுதல் பெற்று அதிகாரமையத்தில் வலம் வருகிறார்.

  பம்மல் நகராட்சி நகரமைப்பு அதிகாரியாக வலம் வரும் நிலையில் நாகராஜனின் சொத்து மதிப்பு ரூ60கோடியை தாண்டுமாம்.. நாகராஜன் பினாமி சொத்துப்பட்டியல்  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகாராக அளிக்கப்பட்டுள்ளது.

 இப்படி நகரமைப்பு ஆய்வாளர்கள், அதிகாரிகள் மீது டன் கணக்கில் குவியும் ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்று பார்க்கும் போது, ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் விசாரணை அதிகாரிகளை விலைக்கு வாங்கிவிடுகிறார்கள்.

 நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் ஊழல் நகரமைப்பு அதிகாரிகள் எப்படி காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை விரிவாக பிறகு பார்ப்போம்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *