Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. கிங் இன்ஸ்டியூட் பெயரில் ரூ16.16கோடிக்கு போலி பில்- நவீனமயமா? போலி மயமா?

கொரோனா.. கிங் இன்ஸ்டியூட் பெயரில் ரூ16.16கோடிக்கு போலி பில்- நவீனமயமா? போலி மயமா?

கொரோனா தொற்று இருக்கிறதா என்று சளி ஆய்வு எடுக்கப்பட்டு, கிங் இன்ஸ்டியூட்டில் டெஸ்ட் செய்யப்படுகிறது. ஆனால் கிங் இன்ஸ்டியூட்டில் ஆய்வு மிகவும் தாமதமாகிறது. அதற்கு காரணம் கிங் இன்ஸ்டியூட் ஆய்வுக் கூடம் நவீனப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 ஆனால் கிங் இன்ஸ்டியூட்டை நவீனப்படுத்தப்பட்டதாகவும், அதற்கு ரூ19.49கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அரசு ஆணைகளில் உள்ளது.

  1. அரசாணை எண்.391/24.03.2020ல் Corona Virus(COVID 19)- Upgradation of King Institute of Preventive Medicine by establishing the Bio Safety level 3 faceility in the Department of Virology – ரூ12.38கோடி ஒதுக்கீடு செய்து, நவீனப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கோப்புகளில் உள்ளது.
  2. அரசாணை எண். 248/17.06.2020ல்-COVID 19 Preparedness for surge Capacity…King institute of Preventive medicine and Research Guindy Chennai-COVID 19 Testing Lab(Authorised By WHO for vaccination and Certificate) Urgent repairs to COVID 19 testing lab க்கு ரூ3.78 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக கோப்புகளில் உள்ளது.

இதே அரசாணையில் கிங் இன்ஸ்டியூட்டில் மைனர் சிவில் பணிக்களுக்காக ரூ3.33கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 இரண்டு அரசாணைகள் மூலம் கிங் இன்ஸ்டியூட்டுக்கு செலவு செய்யப்பட்டுள்ள தொகை ரூ19.49 கோடி.. ஆனால் கிங் இன்ஸ்டியூட் லேப் நவீனப்படுத்தப்படவில்லை. அதனால் கொரோனா ஆய்வுகள் முடிவுகள் வர தாமதமாகிறது.

  தற்போது ஏழு தனியார் லேப்களில் கொரோனா ஆய்வுகள் கொடுக்கப்பட்டு, தினமும் முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்திலிருந்து ஒரு கோடி பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்திலிருந்து பிரிமியல் தொகையிலிருந்து கொரோனா ஆய்வுக்காக செலவு செய்யப்படுவது சட்டத்துக்கு புறம்பானது.

  அரசாணை எண்.391/24.3.2020ல் கிங் இன்ஸ்டியூட்  ரூ12.38கோடி நவீனப்படுத்தப்பட்டு இருந்தால் கொரோனா ஆய்வு தாமதம் ஆக வாய்ப்பே இல்லை.

  கிங் இன்ஸ்டியூட் நவீனப்படுத்தப்படுதல் பெயரில் ரூ12.38 கோடி + ரூ3.38கோடி= ரூ16.16கோடிக்கு போலி பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி ஆவணங்கள் அளிக்க மறுப்பதால், போலி பில் என்பது உறுதியாகிறது..

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் இருவரும் கிங் இன்ஸ்டியூட் நவீனப்படுத்தப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன், வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?

 கொரோனாவிலும், தமிழக மக்களை காப்பாற்றமல் அதிகாரமையத்தில் இருப்பவர்கள் கொரோனா நிதியில் ஊழல் செய்வது, வாக்களித்த தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகும்..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *