Breaking News
Home / பிற செய்திகள் / மக்கள்செய்திமையம் அன்பழகன் யார்?- இந்திராகாந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவன்…

மக்கள்செய்திமையம் அன்பழகன் யார்?- இந்திராகாந்திக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவன்…

திருச்சி மாவட்டம், இலால்குடி அருகில் உள்ள பூவாளூர் கிராமத்தில் திராவிட பரம்பரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். திமுகவுக்கு முதன் முதலில்  கார் வாங்கி கொடுத்த பூவாளூர் தியாகராச செட்டியார்  வள்ளல் குடும்பத்தின் வாரிசு. எங்கள் குடும்பத்தை பற்றி மறைந்த திமுக அமைச்சர் அன்பில் தருமலிங்கத்துக்கு முழுமையாக தெரியும்.

  தலைவர் கலைஞரால்  வாங்க பூவாளூர்காரங்க என்ற அன்பாக அழைக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவன். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர் நெஞ்செழியன் இவர்கள் எல்லாம் திருச்சிக்கு வரும் போது, உணவுகள் பூவாளுரிலிருந்து செல்லும். அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், நாவலர், எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டில் சாப்பிடும் போட்டோக்கள் இன்னும் எங்கள் வீட்டின் சுவர்களில் காட்சியளிக்கிறது.

 இப்படிப்பட்ட குடும்பத்தின் வாரிசு அன்பழகன், 1969ல் அண்ணா மறைவின் போது7வயது, லாரியில் சென்னைக்கு வந்து அண்ணாவுக்கு மறைவுக்கு மரியாதை செலுத்தியவன்..

 1971ல் சட்டமன்றத் தேர்தலில் இலால்குடி சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வெ.ந.முத்தமிழ்செல்வனுக்கு போடுங்கம்மா ஒட்டு உதயசூரியனுக்கு… போடுங்கய்யா ஒட்டு உதயசூரியனுக்கு என்று திமுக கொடி ஏந்தி கோஷம் போட்டவன்..

 இந்திராகாந்தி அம்மையாரால் அவரச நிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டு, திமுக ஆட்சி கலைக்கப்பட்டவுடன், திருச்சி அமெரிக்கன் ஆஸ்பத்திரி அருகில் திமுக சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடந்தது.

  கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்துக்கொண்டு, கண்ணீர்புகைகுண்டுக்கு ஆளாகி சித்ரவதை பட்டவன் தான் மக்கள்செய்திமையத்தின் ஆசிரியர் அன்பழகன்…

 ஆனால் இன்று திமுகவில் பலன் அடைந்திருக்கும் என்.ஆர்.இளங்கோ எம்.பி உள்ளிட்ட சிலர் மக்கள்செய்திமையம் அன்பழகனுக்கு எதிராக செயல்படுவதும், மக்கள்செய்திமையம் செய்திகளை முடக்க நினைப்பது வேதனையாக இருக்கிறது.

 ஊழலுக்கு எதிராக, செய்திகளை வெளியிட்டு தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படுவது மக்கள்செய்திமையம் மட்டுமே…                                                                            தொடரும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *