Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… உமாநாத் ஐ.ஏ.எஸ் “420”- ஆட்டம் போடும் நால்வர் அணி..

கொரோனா… உமாநாத் ஐ.ஏ.எஸ் “420”- ஆட்டம் போடும் நால்வர் அணி..

தமிழகத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரி பட்டியலில் இருந்த உமாநாத் ஐ.ஏ.எஸ் ஊழலில் குளித்துக்கொண்டு இருக்கிறார் என்பதுதான் உண்மை. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில்  ஜனவரி 2020 முதல் இன்று வரை தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்ட தகவல்களுக்கு தகவல் அளிக்கவில்லை. மேல்முறையீடு செய்த பிறகும் தகவல் அளிக்க முன்வரவில்லை. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ், தமிழகத்தில் 420 ஆகதான் வலம் வருகிறார்.

 சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சுகாதாரத்துறை மாஜி செயலாளர் பீலாராஜேஷ்தாஸ் ஐ.ஏ.எஸ், முதல்வரின் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ் இந்த நால்வர் கூட்டணி தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத் ஐ.ஏ.எஸ்யை பின்னணியிலிருந்து இயக்குகிறது.

  தமிழக அரசின் கொரோனாவில் தொடர்புடைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, வருவாய் நிர்வாக ஆணையரகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005க்கு பதில் அளிக்கிறது.

 ஆனால் சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கொரோனா கொள்முதல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி என்ன தகவல்கள் கேட்டாலும் தகவல் அளிப்பதில்லை. மக்கள்செய்திமையம் ஆர்.டி.ஐ. சட்டம் 2005ன் விண்ணப்பம் ஆறு முடங்கி கிடக்கிறது. மேல்முறையீடு செய்தும் பதில் அளிக்கவில்லை. ஆர்.டி.ஐ சட்டத்தை மதிக்காத, உமாநாத் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.

  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், Outsourcing ஒப்பந்தம் எடுத்துள்ள பத்மாவதி   நிறுவனத்துக்கு(மாஜி தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் நிறுவனம்) ஆதரவாக உமாநாத் ஐ.ஏ.எஸ் செயல்பட்டு வருகிறார்.  பத்மாவதிக்கு எதிரான வழக்குகளில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் பதில் மனு கூட தாக்கல் செய்யாமல், வழக்கு முடங்கி கிடக்கிறது….

  கொரோனா தொற்று நோய் பரவும் நிலையில் கூட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் , பத்மாவதி நிறுவனத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசம். ஆனால் நால்வர் கூட்டணியின் உத்தரவின் படி பணம் மட்டும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

 தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் ஜனவரி 2020 முதல் 23.7.2020 வரை கொள்முதலில் ரூ100கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இதில் பல ஆதாரங்கள் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் ஆய்வுகள், தனியார் லேப்களுக்கு தினமும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆய்வுக்கு ரூ2500 என சராசரி ஒரு கோடிக்கு மேல் முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் நிதியிலிருந்து பணம் விடுவிக்கப்பட்டு வருகிறது.

 முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் பிரிமியம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணமும் நால்வர் கூட்டணியில் ஊழல் ஆட்டம் தான்..

   சுகாதாரத்துறையின் நால்வர் கூட்டணியின் ஊழல்கள் தொடர்பாக  சிபிஐ வரை மக்கள்செய்திமையம் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கிவிட்டது…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *