Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா கொள்ளை- புத்தகம் அம்பேத்கர் சிலைமுன் வெளியிடு-ஆன் – லைனில் அமோக ஆதரவு..

கொரோனா கொள்ளை- புத்தகம் அம்பேத்கர் சிலைமுன் வெளியிடு-ஆன் – லைனில் அமோக ஆதரவு..

கொரோனா கொள்ளை புத்தகம் இன்று காலை அய்யனம்பாக்கத்தில், அமைச்சர் பெஞ்சுமின் வீட்டின் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன் வெளியிடப்பட்டது. கொரோனா கொள்ளை புத்தகத்தை பார்த்த தலைமைச் செயலகத்தின் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியில் முழ்கினார்கள்..

 தமிழகம் முழுவதும் உள்ள ஊழலுக்கு எதிரான மக்கள், கொரோனா கொள்ளை புத்தகம் கேட்டு சுமார் 584 பேர் ஆன் லைனில் பணம் செலுத்தி உள்ளார்கள்..பணம் செலுத்தியவர்களுக்கு புத்தகம் அனுப்பும் பணி நடந்துக்கொண்டு இருக்கிறது.

 கொரோனா கொள்ளை புத்தகத்துக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை பெருகி உள்ளது. ஆனால் கொரோனா கொள்ளை புத்தகம் வெளியானதில் எதிர்கட்சியான திமுக அக்கறை செலுத்தவில்லை …

  கொரோனா கொள்ளை தொடர்பாக ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிடும் மக்கள்செய்திமையத்தை திமுகவும், முரசொலியும் புறக்கணிப்பதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.

  தமிழகத்திலிருந்து ஊழல் அதிமுக ஆட்சியை 2021ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்  அகற்ற அமைக்கப்பட்டுள்ள களத்தில் மக்கள்செய்திமையம் மட்டுமே முன்னணியில் உள்ளது.  திமுக உள்ளிட்ட  எதிர்கட்சிகள் பின் தங்கியே உள்ளது.

  கொரோனா கொள்ளை புத்தகம் கேட்டு, தமிழ்நாட்டு மக்கள் மக்கள்செய்திமையத்துடன் தொடர்புக்கொண்டுபடி இருக்கிறார்கள்..

 ஊழலுக்கு எதிரான களத்தில் மக்கள்செய்திமையம் மட்டுமே முன்னணியில் உள்ளது…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *