Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…டாம்ப்காலில்- ஆடாதொடை, கருவேப்பில்லை, நல்லெண்ணை கொள்முதலில் ஊழல்..

கொரோனா…டாம்ப்காலில்- ஆடாதொடை, கருவேப்பில்லை, நல்லெண்ணை கொள்முதலில் ஊழல்..

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துறையில் எந்தபக்கம் திரும்பினாலும் ஊழல், கொடிகட்டிபறக்கிறது.

 கொரோனாவை சித்த மருந்துகளும் குணப்படுத்தலாம், என்று இந்தியா முழுவதும் குரல் எழுந்தாலும், அந்த குரல் தமிழக அரசின் கோட்டையில் அதிகாரிகளுக்கு எட்டவில்லை.

 டாம்ப்காலில் ஆடாதொடை இலை, கருவேப்பில்லை, நல்லெண்ணை கொள்முதலில் மெகா ஊழல் அரங்கேறியுள்ளது.

டாம்ப்கால் இயக்குநர் கணேஷ் ஐ.ஏ.எஸ் மற்றும் உற்பத்தி மேலாளர் டாக்டர் ஆறுமுகம்,  தலைமையிலான கூட்டணி அடித்த கொரோனா கொள்ளை இதோ…

  1. ஆடாதொடை – கெளதம்குமார் பெயரில் சப்ளை…

சந்திரசேகரபுரம் கூட்டுறவு நிறுவனம் கும்பகோணம் – ஒரு கிலோ ரூ90/-1126 கிலோ- 1,01,340/-

கெளதம்குமார், அருணா டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து ஆடாதொகை இலை கொள்முதல் செய்த விலை கிலோ ரூ65/- 1126கிலோவுக்கு ரூ73190/-

 அருணா டிரக்ஸ்யில் நேரிடையாக சந்திரசேகரபுரம் கூட்டுறவு நிறுவனம் ஏன் கொள்முதல் செய்யவில்லை.. இந்த ஒரு கொள்முதலில் மட்டும் கமிசன் கொள்ளை..ரூ28150/-

  • கருவேப்பில்லை கொள்முதல்..

 கருவேப்பில்லையை 4.4.2020 டாம்ப்கால் ரூ93.50 மற்று ஜி.எஸ்.டியுடன் சேர்த்து ரூ97.95 என 220 கிலோ ரூ2,05,700க்கு கொள்முதல் செய்தது.’

அதே கருவேப்பில்லையை டாக்டர் கெளதம் குமார், கும்பகோணம் சந்திரசேகரபுரம் கூட்டுறவு நிறுவனத்துக்கு ஒரு கிலோ ரூ82+5% ஜி.எஸ்.டியுடன் 2200 கிலோ 1,91,688க்கு சப்ளை செய்துள்ளதுள்ளார். இந்த ஒரு கொள்முதலில் மட்டும் கமிசன் கொள்ளை ரு14,012…

  • நல்லெண்ணை கொள்முதல்..

ஜனவரி 2020ல் 16லிட்டர் அளவுக்கொண்ட 600 டின்  ரூ13.75 இலட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. பிப்ரவரி 2020 முதல் ஜூன் 2020 வரை 16லிட்டர் அளவுக்கொண்ட600 டின் ரூ22.45இலட்சத்துக்கு கொள்முதல் செய்துள்ளது டாம்ப்கால்..நல்லெண்ணையில் ஐந்து மாதங்களில் கொள்ளை கமிசன் ரூ43.50இலட்சம்

 நமக்கு கிடைத்த  ஆதாரங்கள் எல்லாம் ஒரு கொள்முதலுக்கு, ஆனால் ஐந்த மாதங்களில் பல கொள்முதல்களில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்பதுதான் உண்மை..

இப்படி கொரோனா பெயரில் நல்லெண்ணை, கருவேப்பில்லை, ஆடாதொகை இலை கொள்முதலில் டாம்ப்காலில் ஊழல் நடந்துள்ளது.

 இந்த மெகா ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *