Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா… சுகாதாரத்துறையின் அண்ட புளுகு… ஆகாச புளுகு… கொரோனா நோயாளிக்கு உணவுக்கு ரூ230.. கொரோனா டாக்டர்கள் உணவுக்கு ரூ600/- முடங்கி போகும் தினமும் 50,000சாம்பிள்கள்..

கொரோனா… சுகாதாரத்துறையின் அண்ட புளுகு… ஆகாச புளுகு… கொரோனா நோயாளிக்கு உணவுக்கு ரூ230.. கொரோனா டாக்டர்கள் உணவுக்கு ரூ600/- முடங்கி போகும் தினமும் 50,000சாம்பிள்கள்..

கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறையின் அண்ட புளுகு, ஆகாச புளுகு அம்பலமாகியுள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் கிங் இன்ஸ்டியூட் உள்ளிட்ட அரசு ஆய்வுக் கூடங்களில் கொரோனா ஆய்வு என்பது மிகவும் குறைந்த அளவில் மட்டும் செய்யப்படுகிறது.

 கொரோனா ஆய்வுகளை, தனியார் ஆய்வு கூடங்களுக்கு, ஒரு கொரோனா ஆய்வுக்கு ரூ2500/- என நிர்ணயம் செய்து, கோடிக்கணக்கில் முதமைச்சர் காப்பீட்டுத்திட்டத்திலிருந்து  பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. முதலமைச்சர் காப்ப்பீட்டுத்திட்டத்திலிருந்து கொரோனா சாம்பிள் ஆய்வுகளுக்காக செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது..

   தமிழகம் முழுவதும் தினமும் கொரோனா ஆய்வுகள் முடிவுகள் வெளிவராமல் 50,000 முடங்கி கிடக்கிறது. கொரோனா டெஸ்ட் எடுத்து, 7 நாட்கள் கழித்து வெளியாகும் பாசிடிவ், நெகடிவ் எந்த முடிவாக இருந்தாலும் சரியாக இருக்காது. இதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டு வருகிறது.

 அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகள் மற்றும் கொரோனா சிறப்பு வார்டுகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அரசு உணவுக்கு அதிகபட்சமாக சென்னையில் ஒருவருக்கு ரூ300, மற்ற மாவட்டங்களில் ரூ230 முதல் ரூ250 செலவு செய்யப்படுகிறது.

 ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா நோயாளிகளுக்கு ரூ500 வரை செலவு செய்யப்படுவதாக போலி பில் போடுகிறார்கள்.

கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் லெமன் ஜூஸ்க்கு

ரூ60 பில் போடப்படுகிறது.

சென்னை…

 கொரோனா நோயாளிகளை கவனிக்கு டாக்டர்கள் 494 பேர்- தினமும் செலவு ஒருவருக்கு ரூ3000.

 கொரோனா நோயாளிகளை கவனிக்கும் நர்சுகள் -441 பேர் தினமும் செலவு ஒருவருக்கு ரூ2000/-

கொரோனா நோயாளிகளை கவனிக்கு சுகாதார ஊழியர்கள்  691 பேர் தினமும் செலவு ஒருவருக்கு ரூ1250/-

 மற்ற மாவட்டங்களில்…

 கொரோனா நோயாளிகளை கவனிக்கு டாக்டர்கள் 942 பேர்- தினமும் செலவு ஒருவருக்கு ரூ2500/-

 கொரோனா நோயாளிகளை கவனிக்கும் நர்சுகள் -1148 பேர் தினமும் செலவு ஒருவருக்கு ரூ1500/-

கொரோனா நோயாளிகளை கவனிக்கு சுகாதார ஊழியர்கள்  1966 பேர் தினமும் செலவு ஒருவருக்கு ரூ1000/-

 இப்படி 30 நாளைக்கு குறைந்த பட்சம் ரூ27.81கோடி செலவு செய்யப்படுகிறது.

 ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கு செலவு செய்யப்படும் தொகை ஒருவருக்கு ரூ230 –ரூ250 தான். ஆனால் தினமும் ஒரு நோயாளிக்கு ரூ400, ரூ500 போலி பில் போடப்படுகிறது.

 கொரோனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 444 மறைக்கப்பட்டுள்ளதாக, டாக்டர் வடிவேலு குழு அறிக்கை அளித்துள்ளது.

 பிளாஸ்மா சிகிச்சை என்பதன் பெயரில் கூத்தடிக்காமல், கொரோனா டெஸ்ட் எடுத்தவர்களில் ஆய்வு முடிவுகளை வெளியிட ஏழு நாட்களாகிறது. ஏழுநாட்களில் எத்தனை பேருக்கு கொரோனா பரவும் என்பதை யோசிக்கவில்லை. கொரோனா சமூக வைரலாக பரவுவதே கொரோனா ஆய்வு முடிவதில் வெளியாவதில் ஏற்படும் தாமதம் தான்..

  தமிழகம் முழுவதும் கொரோனா டெஸ்ட் எடுத்த பிறகு முடங்கி கிடக்கும் முடிவு தினமும் 50,000த்தை தாண்டும். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அண்ட புளுகு…ஆகாச புளுகால் தமிழகம் முடங்கி போய் உள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *