Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…டாமின்- கிராபைட் அடிமாட்டு விலைக்கு- சீனாவுக்கு விற்பனையா…

கொரோனா…டாமின்- கிராபைட் அடிமாட்டு விலைக்கு- சீனாவுக்கு விற்பனையா…

TAMIN தமிழ்நாடு மினரல்ஸ் பணியாற்றும் ஊழியர்கள் 732பேருக்கு கடந்த மூன்று மாதமாக 15 நாள் சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது. அதுவும் இந்த மாதம் கொடுத்த 15 நாள் சம்பளத்தில் சேம நல நிதியும் பிடித்துவிட்டார்கள்.. பெரும்பாலான டாமின் ஊழியர்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது.

 மாஜி நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ், மேலாளர் ஹன்றி ராபர்ட், துணை மேலாளர் வெங்கடேசன் மூவர் அணி அடித்த கொள்ளையால், டாமின் மூடுவிழாவை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் டாமின் ஊழியர்களுக்கு பாதி சம்பளம்தான் கொடுக்கப்பட்டு வருகிறது..

 இந்தியாவிலேயே கிராபைட் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் குமரபட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களில் 236.85 ஹெக்டேரில்தான் கிடைக்கிறது.

 கிராபைட் வெட்டியெடுக்கும் பணி மே மாதம் முதல் மீண்டும் தொடங்கியது. தினமும் 24 டன் என மாதம் 700 -720 டன் வெட்டியெடுக்கப்படுகிறது. 2200 டன் கிராபைட் ஸ்டாக் உள்ளது. கிராபைட் வெட்டியெடுத்து, உற்பத்தி விலை ஒரு டன்னுக்கு ரூ36,000/-அடக்கமாகிறது. ஒரு டன் ரூ47,000 –ரூ50,000 விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்து, டாமின் E-Tender கோரப்பட்டது. E-Tenderல் கூட்டணி அமைத்து, சில நிறுவனங்கள் ஒரு டன்னுக்கு ரூ28,000/-க்கு மேல் விலை கேட்கவில்லை.

 கிராபைட் உற்பத்தி விலை ரூ36,000/-த்தைவிட அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்று டாமின் பொறுப்பு நிர்வாக இயக்குநர் கஜலெட்சுமி ஐ.ஏ.எஸ் முடிவு செய்து, E-Tender ரத்து செய்துவிட்டார்.

சட்டத்துக்கு புறம்பாக பதவி உயர்வு பெற்ற  பொது மேலாளராக பதவியை விலைக்கு வாங்கி அதிகாரமையத்தில் வலம்  ஹன்றி ராபர்ட்(மெக்கானிக்கல் பொறியாளர்- எப்படி பொது மேலாளராக பணியாற்ற முடியும்) மேலாண்மை இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் இருந்த போது, அவருடன் கூட்டணி அமைத்து கிராபைட்டை அடிமாட்டு விலைக்கு விற்று ஆண்டுக்கு ரூ20கோடி என ஐந்தாண்டுகளில் ரூ100கோடி டாமினுக்கு இழப்பு ஏற்படுத்தினார்.

 ஹன்றிராபர்ட் , அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் பேரம் பேசி மீண்டும் அடிமாட்டு விலைக்கு கிராபைட்டை விற்பனை செய்ய முயற்சி செய்கிறார்.

 தொழில்துறை செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் டாமினில் சம்பளம் போட பணமில்லை, அதனால் கிராபைட் உற்பத்தியை விலையை விட குறைவான விலைக்கு விற்பனை செய்யலாம் என்று அமைச்சருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

 மாஜி நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ், பொது மேலாளர் ஹன்றிராபர்ட் கூட்டணி, செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ் பின்னணியில் 2200 டன் கிராபைட்டை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு(உற்பத்தி விலையைவிட குறைவாக) விற்பனை செய்ய முயற்சிகள் செய்கிறார்கள். சீனாவும், கிராபைட்டை கொள்முதல் செய்ய, இந்தியாவில் சில நிறுவனங்களை களத்தில் இறக்கியுள்ளது.

 டாமின் பொறுப்பு நிர்வாக இயக்குநர் கஜலெட்சுமி ஐ.ஏ.எஸ், கிராபைட்டை உற்பத்தி விலையை குறைவாக விற்பனை செய்ய ஒப்புதல் அளிக்கவில்லை. ஆனால் கஜலெட்சுமி ஐ.ஏ.எஸ் மீறி முடிவெடுக்கவும் வாய்ப்பு உள்ளது.

  கிராபைட்டை உற்பத்தி விலையை குறைவான விலைக்கு விற்பனை செய்ய கூடாது. வள்ளலார் ஐ.ஏ.எஸ் நிர்வாக இயக்குநராக பணியாற்றிய போது நடந்த ரூ250கோடி ஊழல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது..

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா… விழுப்புரம் முகக் கவசம் கொள்முதலில் ஊழல்..

உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி, முக கவசம், பளிச்சிங் பவுடர் கொள்முதலில் அத்துமீறிய ஊழல் நடந்து வருகிறது.  விழுப்புரம் நகராட்சியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *