Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா.. ஆவடி மாநகராட்சி.. நால்வர் அணியின் ஊழல் அட்டகாசம்..

கொரோனா.. ஆவடி மாநகராட்சி.. நால்வர் அணியின் ஊழல் அட்டகாசம்..

ஆவடி மாநகராட்சியை சுகாதார ஆய்வாளர் மோகன், வருவாய் அதிகாரி இந்திராணி, சிறப்பு பில் கலெக்டர் இந்திராணியின் சகோதரர் சத்தியமூர்த்தி மற்றும் ஒய்வு பெற்ற ஆர்.டி.எம்.ஏ மோகன் இந்த நால்வர் அணி ஊழல் மாநகராட்சியாக மாற்றி, அதிகாரமையத்தில் வலம் வருகிறார்கள்.

  ஆவடி மாநகராட்சி ஆணையராக யார் பதவிக்கு வந்தாலும், மது,மாதுவில் அவர்களை நால்வர் அணி மூழ்கடித்து, தங்கள் பாக்கெட்டில் வைத்துக்கொள்வார்கள்.

 சுகாதார ஆய்வாளர் மோகன், கொரோனா தொற்று பாதிக்கப்படாமலேயே, கொரோனா உச்சக்கட்டத்தில் இருக்கும் போது 15 நாட்கள் லீவில் போய்விட்டார். கொரோனா பெயரில் போடப்பட்ட லீவில் ரூ50 இலட்சத்துக்கு வீடு வாங்கி உள்ளார் என்பதுதான் பின்னனி தகவல்.

    கொரோனா கட்டுப்படுத்த கொள்முதல் செய்யப்பட்ட கிருமி நாசினி,லைசால், பளிச்சிங் பவுடர் மெகா ஊழலை அரங்கேற்றியுள்ளார். ஆவடி மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட எந்த ஊழியர்களுக்கும் மாஸ்க், கையுறை சப்ளை கொடுக்கவில்லை. ஆனால் கொடுக்கப்பட்டது போல் கோப்புகளில் போலி பில் போடப்பட்டுள்ளது.

 மோகன் தம்பிதான், ஆவடி மாநகராட்சி கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தகரம் மூலம் அடைக்கும் பணியை டெண்டர் எடுத்துள்ளார்.  மேலும் கழிவு நீர் எடுக்கும் லாரி டெண்டர் கோராமல், தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்துள்ளார். இதனால் பல லட்சம் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

 ஆவடி மாநகராட்சியில் உள்ள நம்ம டாய்லட் கழிப்பிடங்கள் சீரழிந்து போய் உள்ளது. ஆனால் நம்ம டாய்லட்டை மாதா, மாதம் பராமரிப்பு பணி செய்ததாக இலட்சக்கணக்கில் போலி பில் போடப்பட்டுள்ளது.

  ஆவடி மாநகராட்சியில் உள்ள ஒரு லட்சம் வீடுகளுக்கு இந்திராணி, சத்தியமூர்த்திதான் வரி நிர்ணயம், வரி வசூல் செய்கிறார்கள். அதில் பல லட்சம் ஊழல் நடந்துள்ளது.

 ஈரோடு மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி ஒய்வு பெற்ற மோகன், ஆவடியில் 10பிரியாணி கடை வைத்துள்ளார். பிரியாணி கடைகள் முழுமையாக செயல்பட கொரோனாவிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும் ஒய்வு பெற்ற அதிகாரி மோகன், தன் மருமகன், திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு அதிகாரி ராஜேந்திரன் இருவர் கூட்டணியில் கன்ஸ்டிரக்சன் நடத்துகிறார். இந்த கன்ஸ்டிரக்சன் நிறுவனத்துக்கு சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

   சுகாதார ஆய்வாளர் மோகன் மற்றும் சத்தியமூர்த்தியால், வருவாய் ஆய்வாளர் மோகன் கொரோனாவில் பலியாகி உள்ளார்.

 மனசாட்சி இல்லாத நால்வர் அணியில் ஊழலால் ஆவடி மாநகராட்சி சீரழிந்துக்கொண்டு இருக்கிறது.

  ஆவடி மாநகராட்சியின் ரூ100கோடி ஊழல் ஆதாரங்களுடன் நாளை வெளியாகும்…

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *