
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி, செல்லூர்ராஜ், பெஞ்சுமின் மற்றும் சி.வி.சண்முகம் அதிக பணம் வசூல் செய்யும், டாப்-10 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
தமிழக அரசின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் அமைச்சர்கள் கொரோனாவுக்கு ஏன் சிகிச்சை பெறவில்லை. அப்பாவி பொது மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்..அப்பாவி மக்கள் மட்டும் தரமில்லாத உணவுகளை சாப்பிட்டுக்கொண்டு சிகிச்சை பெற வேண்டுமா?
அமைச்சர்கள் அன்பழகன் மியாட் மருத்துமனை, அமைச்சர் தங்கமணி அப்போலா மருத்துவமனை, செல்லூர் ராஜ் மியாட் மருத்துவமனை, பெஞ்சுமின் வானகரம் அப்போலா மருத்துவமனை மற்றும் சி.வி.சண்முகம் அப்போலா மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள். அமைச்சர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஒமாந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, இராயப்ப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் ஏன் சிகிச்சை பெறவில்லை..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அரசு மருத்துவமனைகளில் ரூ1000கோடியில் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில், அதி நவீன மருத்து உபகரணங்கள் மூலம் அதி நவீன சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்று தினமும் பேட்டி கொடுக்கிறார்கள். இதெல்லாம் உண்மையா? பொய்யா?


ஆனால் அமைச்சர்கள் ஒருவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில்லை என்று அமைச்சர்களிடம் கேட்டால், வெளிப்படையாகவே சிகிச்சை சரியாக இருக்காது என்கிறார்கள். அரசு மருத்துவமனைகளில் அதி நவீன சிகிச்சை தரப்படுவதில்லை. அதனால்தான் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் இறப்பு நாளுக்கு நாள் அதிகமாகிறது என்பதுதான் உண்மையா?
அரசு மருத்துமனைகளில் அமைச்சர்கள் சிகிச்சை பெறவில்லை என்றாலே, அரசு மருத்துவமனைகளில் அதி நவீன சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
அமைச்சர்களே அரசு மருத்துவமனை சிகிச்சை பெறாத கேவலம் தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கொரோனாவுக்கு ரூ500கோடி செலவு செய்யப்பட்டு இருப்பது உண்மையா? அல்லது வழக்கம் போல் போலி பில்லா?
தமிழக அமைச்சர்கள் டாப்-10 தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.. வாக்களித்த அப்பாவி மக்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.. இதில் எது நியாயம்?
மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்று உத்தரவிடவில்லை ஏன்? அரசு மருத்துவமனைகள் டூபாக்கூர் என்பதை ஒத்துக்கொள்கிறாரா…

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறாத அமைச்சர்களை, அமைச்சர் பதவியிலிருந்து ஆளுநர் நீக்க வேண்டும்..