Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

கொரோனா…தமிழகம் தனிநபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் ஊழல்- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு…

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கீழ் செயல்படும் நகராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்ட தனி நபர் கழிப்பறைகளில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில்  மெகா ஊழல் நடந்துள்ளது.  உதாரணமாக…

  1. ஆவடி நகராட்சியில்(மாநகராட்சி) 2000க்கும் மேற்பட்ட தனி நபர் கழிப்பறைகள் கட்டப்படாமலேயே அந்தந்த வீட்டு உரிமையாளர்களிடம் 30 -40 சதவிகிதம் கமிசன் வாங்கிக்கொண்டு காசோலை கொடுக்கப்பட்டுள்ளது. ஆவடி நகராட்சியில் ஆணையராக பணியாற்றியவர் தன் தம்பி பெயரில் தனி நபர்கள் கழிப்பறைகள் டெண்டரை எடுத்து ஊழலை அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
  2.  தாம்பரம் பெரு நகராட்சியில் முழு சுகாதார திட்டத்தில் தனி நபர் கழிப்பறையில் வார்டு எண்.26, கணபதி புரம் கிழக்கு தாம்பரத்தில் கணவன் ஜெயசீலன், மனைவி செல்வி இருக்கும் ஒரே வீட்டில் இரண்டு தனித்தனியே கழிப்பறைகள் கட்டியதாக தலா ரூ8000 வீதம் ரூ16,000 பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

       அதே போல் செலவு சீட்டு எண்.17/4/.3.2016ல் தனி நபர் கழிப்பறைகள் கட்டும் திட்டத்தில்  9 நபர்களுக்கு கழிப்பறைகள் கட்டி தந்த வகையில் ஒன்பது நபர்களுக்கு தனித்தனியே         காசோலைகள் கொடுக்காமல், ஒப்பந்ததாரர் இரவி என்பவர் பெயரில் 9 நபர்களுக்கும் தலா ரூ8000 என ரூ72,000/-பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

         ஒப்பந்ததாரர் ரவி என்பவரிடம் காசோலை வழங்கியதை பார்க்கும் போது, ஒன்பது நபர் வீட்டிலும் தனி நபர் கழிப்பறைகள் கட்டவில்லை. போலியாக கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.

          தனி நபர் கழிப்பறைகள் ஊழல் தொடர்பாக Ministry of jai shakti Department of Drinking water and sanitation , Swachh Bharat mission(Gramin) New –Delhi ஆதாரங்களுடன்  புகார் அனுப்பினேன். மக்கள்செய்திமையம் அளித்த புகாரின் பேரில் 27.05.2020ல் Under           Secretary(SBM) Ministry of Housing and Urban affairs, Nirman Bhawan, New-Delhi மூலம்           விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

  • தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் புளியக்குடி ஊராட்சியில் 1வது வார்டில் 50க்கு மேற்பட்ட வீடுகளில் தனி நபர் கழிப்பறைகள் கட்டப்பட்ட அவலமான நிலையில் உள்ள புகைப்படங்களை பாருங்கள்.. ஊழலுக்கு இதுவே ஆதாரம்…

 மக்கள்செய்திமையம், சிபிஐயில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சிகளிலும், கிராம பஞ்சாய்த்துகளிலும்  தனி நபர் கழிப்பறைகளில் நடந்த பல கோடி ஊழல்கள் தொடர்பாக இறுதி விசாரணை நடந்து வருகிறது.

  தனி நபர் கழிப்பறைகளில் கோடிக்கணக்கில் நடந்த  ஊழல்களில் விரைவில் அமைச்சர், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் 40க்கு மேற்பட்ட நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், 100க்கு மேற்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள்(பி.டி.ஒ) மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

 விரைவில் தனிநபர் கழிப்பறைகளில் ஊழலில் நூற்றுக்கு மேற்பட்ட அரசு அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள்.

  தனிநபர் கழிப்பறைகளில் நடந்த பல கோடி ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்ய மறுத்த தமிழ்நாடு அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் மீது மக்கள்செய்திமையம் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *