தூத்துக்குடி சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை தொடர்பாக, காயங்களுடன் கூடிய புகைப்படங்கள், வாட்ச் அப் குழுக்கள் மற்றும் தனி நபர் வாட்ச் அப்புகளில் வெளியானதை உண்மை என்று நம்பி மக்கள்செய்திமையத்தில் புகைப்படங்களை வெளியிட்டோம்.
புகைப்படங்கள் வெளியான சிறிது நேரத்தில், இந்த புகைப்படங்களில் உண்மைதன்மை இல்லை என்பது உறுதியானது. இதை தொடர்ந்து உடனடியாக அறிக்கை வெளியிட்டோம். அந்த அறிக்கையில் இணையதளத்திலிருந்து நீக்கிவிட்டு, வருத்தம் தெருவிப்போம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தேன்.
மின்சாரம் தடைப்பட்ட காரணத்தால், சிறிது நேரம் தாமதமானாலும், மக்கள்செய்திமையம் இணையதளத்திலிருந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்களுடன் கூடிய புகைப்படங்களை நீக்கிவிட்டோம்.
இது தொடர்பாக சிபிசிஐடியில் 6.7.2020 நடந்த விசாரணையில் உண்மைதன்மை இல்லாத ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்களுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டதற்கு(உண்மைதன்மை இல்லை என்று தெரிந்தவுடன் வெளியான கொஞ்ச நேரத்திலேயே இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது) வருத்தமும், மன்னிப்பு கேட்டுக்கொண்டேன்.
மேலும் இனி உண்மைதன்மை இல்லாத புகைப்படங்கள் மற்றும் செய்திகளை மக்கள்செய்திமையத்தில் வெளியிடுவதில்லை என்று சிபிசிஐடி விசாரணையில் எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளேன்.
மக்கள்செய்திமையத்தில் ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு, வாசர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்கி வைத்திருந்தோம். அந்த நம்பகத்தன்மைக்கு சின்ன சரிவு ஏற்பட்டுள்ளது.
மக்கள்செய்திமையத்தில் உண்மைதன்மை இல்லாத செய்திகள், புகைப்படங்கள் வெளிவராது.. ஊழல், நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டு மக்கள்செய்திமையம் வாசர்களிடம் நம்பகதன்மையில் முதலிடமாக வலம் வரும் என்பதை உறுதி அளிக்கிறேன்.
பத்திரிகையாளர்கள் மத்தியில், உண்மைதன்மை இல்லாதவைகளை மக்களிடம் பரப்பக்கூடாது என்பதை இயக்கமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.