
கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவும் என்பதால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொழிற்துறை செயலாளர் முருகானந்தம் கூட்டணி தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பாக மாஸ்க், பிபிஇ கிட், என்.95 மாஸ்க் மற்றும் மருந்து, மாத்திரைகள், மருத்துவ உபகரணங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 30% Capital sunsidy உள்ளிட்ட பல சலுகைகள் அளிப்பதாக அறிவித்தார்கள்..
ஜூலை30ம் தேதிக்குள் உற்பத்தியை தொடங்குவதாக ஸ்ரீ ஹெல்த் கேர் இந்தியா உரிமையாளராகிய திருமதி பி.ஜெயஸ்ரீக்கு தண்டரை தொழிற்பேட்டையில் 1.309ஏக்கர் பரப்பளவு கொண்ட மேம்படுத்தப்பட்ட தொழிற்மனை எண்கள் முறையே 42,43,44,59,60&61 ஆகியவைகள் முழு கிரைய விற்பணை அடிப்படையில் அரசின் தொழில் துறை அரசாணை எண்.113/2.4.2020ல் வெளியானது.

அரசாணை 113ன்படி ஜூலை 31க்குள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தொடர்புடைய பொருட்கள், மருத்துவ உபகரணங்களின் உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால் ஸ்ரீ ஹெல்த் கேர் இந்தியா நிறுவனம் உற்பத்தியை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லை.
Minimum 50% of the equipment and drugs produced under the package during 3 months(may –july 2020)will be purchases by the Tamilnadu medical services corporation at negotiated rates என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் உற்பத்தியே தொடங்காத நிறுவனத்தில் எப்படி கொள்முதல் செய்வார்கள் என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.
கொரோனா பெயரில் பல நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொரோனா சலுகை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள் உற்பத்தி எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை..
கொரோனா பெயரில் தமிழக அரசின் அதிகாரிகளும், அமைச்சர்களும் அடிக்கும் கொள்ளை எல்லை மீறிக்கொண்டே போகிறது என்பதுதான் உண்மை…
கொரோனா பெயரில் தமிழக மக்களை எத்தனை நாளைக்குதான் ஏமாற்றுவார்கள்…