Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…நகராட்சி நிர்வாகம்… மும்மூர்த்திகளின் ஊழல் கூத்து… இருவர் ரப்பர் ஸ்டாம்பா?…

கொரோனா…நகராட்சி நிர்வாகம்… மும்மூர்த்திகளின் ஊழல் கூத்து… இருவர் ரப்பர் ஸ்டாம்பா?…

நகராட்சி நிர்வாக ஆணையரகம் ஊழலில் மூழ்கிவிட்டது. நகராட்சி நிர்வாகத்துறை ஊழலில் காணாமல் போய்விட்டது. நகராட்சிநிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன்  மற்றும்  2019 மார்ச் மாதம்  வருமான வரித்துறை ரெய்டில் ரூ77 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும் அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன்,  இந்த மும்மூர்த்திகளால் நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் நாடகம் தினமும் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது.

  பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யும், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவரும் நாங்கள் ரப்பர் ஸ்டாம்ப் என்கிறார்கள். பூம்…பூம்..மாடு மாதிரி தலையாட்ட ஐ.ஏ.எஸ் பதவியும் தேவையில்லை. கூடுதல் இயக்குநர் பதவியும் தேவையில்லை..

மும்மூர்த்திகளில்  இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் அதிகாரிகள் கையெழுத்து போட்ட ஊழல் கதை கேளுங்க…

  1. 20.12.19ல் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் நடராசன், சென்னை மாநகராட்சிக்கு மாறுதல் செய்யப்பட்டார். ஆனால் நடராசன் பணியில் சேரவில்லை.
  2. 20.12.19ல் சென்னை மாநகராட்சியிலிருந்து, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமை பொறியாளர் பதவிக்கு மாறுதல் செய்யப்பட்ட புகழேந்தி பணியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகாலம் பணி நீட்டிப்பு முடிந்து ஒய்வு பெற்ற புகழேந்தி, ஒராண்டுக்கு நகராட்சி நிர்வாக தலைமைப் பொறியாளர் மறு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  3. சட்டத்துக்கு புறம்பாக, விதிமுறைகளை மீறி தாம்பரம் நகராட்சி பொறியாளர் கம் ஆணையர் பொறுப்பில் இருக்கும் கருப்பையாராஜாவுக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, செங்கல்பட்டு மண்டல பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
  4.  செங்கல்பட்டு மண்டல பொறியாளராக நியமிக்கப்பட்ட கருப்பையாராஜா, தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக பல லட்சம் கொடுத்து  விலைக்கு வாங்கி உள்ளார்.
  5. நகராட்சி பொறியாளர் சுப்ரமணியன், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக விலைக்கு வாங்கி உள்ளார்.
  6. தேனி அல்லிநகரம் நகராட்சி பொறியாளர் ராஜராம், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக விலைக்கு வாங்கி உள்ளார்.
  7. பல்லவபுரம் நகராட்சியில் ஜமீன்பல்லவரம் சரவணாஸ்டோர் வணிக வளாகம் மற்றும் திரையரங்கு கட்டிட அனுமதி ஊழல் வழக்கில் சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் கணேசமூர்த்தி, ஆவடி மாநகராட்சியில் நகராட்சி ஆய்வாளர் பதவியை பல லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி உள்ளார்.
  8. தாம்பரம் நகராட்சி, திருவள்ளுர் நகராட்சி, ஆவடி நகராட்சி(மாநகராட்சி) களில் நகரமைப்பு பிரிவில் பல ஊழல்களில் சிக்கிய ராஜேந்திரன், திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு அதிகாரி பதவியை விலைக்கு வாங்கி போடும் ஊழல் ஆட்டம் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது.
  9. தூத்துக்குடி மாநகராட்சியில் நகரமைப்பு அதிகாரியாக சில மாதங்கள் பணியாற்றிவிட்டு, பல லட்சம் விலைக்கொடுத்து, பல்லவபுரம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி பதவியை விலைக்கு வாங்கிய மாறனின் சொத்து மதிப்பு ரூ100கோடியாம்..

இப்படி நகராட்சி நிர்வாக ஆணையரகம், மும்முர்த்திகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னாமாகிக்கொண்டு இருக்கிறது.

மும்மூர்த்திகளில் இயக்குநர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவரும் நாங்கள் ரப்பர் ஸ்டாம்ப் என்கிறார்கள். ஆனால் மாமூல் குறையவில்லை.. சொத்து மதிப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது..

   ரப்பர் ஸ்டாம்புகள், கண்ணை மூடிக்கொண்டு  ஊழல் கோப்புகளில் கையெழுத்து போட மனசாட்சி ஒப்புக்கொள்கிறதா?

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *