Breaking News
Home / பிற செய்திகள் / கொரோனா…கொள்ளை.. அரசு ஆணை எண்.177ல் டூபாக்கூர் கணக்கு ரூ150கோடி.. மாஸ்க் –ரூ10.10 — என்.95 மாஸ்க் ரூ199…

கொரோனா…கொள்ளை.. அரசு ஆணை எண்.177ல் டூபாக்கூர் கணக்கு ரூ150கோடி.. மாஸ்க் –ரூ10.10 — என்.95 மாஸ்க் ரூ199…

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்துக்கு மாஸ்க், பிபிஇ கிட், என்.95 மாஸ்க், போர்வை, தலையணை, கட்டில், மெத்தை மற்றும் மாத்திரைகள், வெண்டிலேட்டர் கொள்முதல் செய்ய ரூ150கோடி ஒதுக்கீடு செய்து, விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..

  1. 3 Ply Masks – 25,00,000/- – ரூ2,52,52,500/- ஒரு மாஸ்க் விலை ரூ10.10/-
  2. என்.95 மாஸ்க் – 1,00,000/- -ரூ1,99,50,000/- ஒன்றின் விலை  ரூ199/-
  3. பிபிஇ கிட் – 40,000/-ரூ1,16,03,200/- ஒன்றின் விலை ரூ290/-
  4. போர்டபிள் வெண்டிலேட்டர்- 500-ரூ33,32,00,000/-ஒன்றின் விலை ரூ66,640
  5.  பாய் -10,000 –ரூ2,69,63,000/- -ஒன்றின் விலை ரூ2696/-
  6. தலையணை – 10,000- ரூ23,24,600- ஒன்றின் விலை –ரூ232
  7. தலையணை உறை – 20,000-ரூ11,13,000- ஒன்றின் விலை ரூ55.65.
  8. பெட்சீட் – 20,000 – ரூ50,05,350 – ஒன்றின் விலை ரூ250
  9. ஜெனரல் பெட் – 10,000 –ரூ4,83,56,400 –ஒன்றின் விலை  ரூ4835
  10. FOWLERS COT – 20,000- ரூ2,22,65,774- ஒன்றின் விலை ரூ1113

இப்படி மருந்து, மாத்திரை, மாஸ்க் உள்ளிட்டவைகள் கொள்முதல் அனுமதி அளிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் உள்ளதை அப்படியே வெளியிட்டுவிட்டோம். மற்ற அரசாணைகளை ஒப்பிட்டு பார்த்தால் பல ஊழல் கூத்துகள் அம்பலமாகும்..

  1. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் VENUS SAFETY and HEALTH PVT LTD ல் என்.95 மாஸ்க், ஒரு மாஸ்க் ரூ40 என்ற விலையில் 5 இலட்சம் மாஸ்க் கொள்முதல் செய்துள்ளது. ஆனால் இந்த அரசாணையில் என்.95 மாஸ்க் விலை ரூ199/-
  2. அனிதா டெக்ஸ்காட் இந்தியா பிரைவேட் லிமிட் நிறுவனத்தில் பிபிஇ கிட். ஒன்றி 385என 10இலட்சம் கிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையில் விலை ரூ290/-
  3. எஸ்.பி.எம் டிரக்ஸ் பிரைவேட் லிமிட் நிறுவனத்தில் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் TRIPLE lAYER MASK 50 இலட்சம் ஒரு மாஸ்க் ரூ4.75 விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாணையில் மாஸ்க் விலை ரூ10.10 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு அரசாணையிலும் கண்டபடி விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது.

 அதனால் இந்த அரசாணை எண்.177/1.4.2020 டூபாக்கூர் என்று கூறுவதில் தவறில்லை.

Comments

comments

About mani bharathi

Check Also

கொரோனா…திமுக.. ஜாங்கிட் சிஷ்யன் கு.க.செல்வம்- பாஜகவில் சேருவதில் சிக்கலா?- பசு மாடுகளை வெட்டிய கு.க. செல்வம் பாஜகவிலா?…

     திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், பாஜகவில் சேர முடிவு செய்து, 4.8.2020 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *