
நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் செயற்பொறியாளர் பதவி உயர்வை விலைக்கு வாங்கி, செங்கல்பட்டு மண்டல பொறியாளராக பதவியில் அமர்ந்த, தாம்பரம் பெரு நகராட்சி பொறியாளர் மற்றும் பொறுப்பு ஆணையர் கருப்பையாராஜாவுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பதவிக்கு நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மற்றும் கூடுதல் இயக்குநர் அசோகன் பரிந்துரை செய்துள்ளார்கள்..
பல்லவபுரம் நகராட்சி பொறியாளர் கருப்பையாராஜா 18.6.2019ல் தாம்பரம் பெரு நகராட்சி உதவி செயற் பொறியாளராக பதவியை பல லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கினார். 19.07.2019ல் தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் பொறுப்பை,பொறியாளர் கருப்பையாராஜாவுக்கு கூடுதல் அளிக்கப்பட்டது.
தாம்பரம் பெரு நகராட்சிக்கு ஆணையர் பதவியை நிரப்ப வேண்டும் என்று மக்கள்செய்திமையம் நகராட்சி நிர்வாக ஆணையருக்கும், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியது.
மக்கள்செய்திமையம் அனுப்பிய கடிதம் குப்பைக் கூடைக்குதான் சென்றது. இந் நிலையில் விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கருப்பையாராஜாவுக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.
செயற்பொறியாளர் பதவியை விலைக்கு வாங்கிய கருப்பையா ராஜா, செங்கல்பட்டு மண்டல செயற்பொறியாளர் பதவியையும் கூடுதலாக விலைக்கு வாங்கினார்.

சரி கருப்பையாராஜாவுக்கு பதில் தாம்பரம் பெரு நகராட்சிக்கு ஆணையர் பதவி நிரப்பப்படுமா என்று எதிர்ப்பார்த்த நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் பரிந்துரையின் பேரில் 1.7.2020ல் கருப்பையாராஜா தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் பதவியும் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஆணை வெளியாகி உள்ளது.
19.7.2019ல் முதல் தாம்பரம் பெரு நகராட்சியில் போடப்பட்ட போலி பில்லின் மதிப்பு ரூ100கோடி எட்டியுள்ளது.
இந் நிலையில் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் மற்றும் தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் பொறுப்பில் வலம் வரும் கருப்பையா ராஜாவை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்ய, நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், கூடுதல் இயக்குநர் அசோகன் இருவரும், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது.
கருப்பையாராஜாவை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமித்துவிட்டு, ஆறு மாதங்கள் கழித்து ஐ.ஏ.எஸ் பட்டம் பெறலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டுவர அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாம்..
இனி கருப்பையாராஜா ஐ.ஏ.எஸ் வாழ்க… கருப்பையா ராஜா ஐ.ஏ.எஸ் வாழ்க என்ற கோஷம்தான் கேட்கும்..