
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னீக்ஸ் இருவருரையும், சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் காட்டுமிராண்டித்தனமாக நடத்திய தாக்குதலில் பலியானார்கள். இந்த கொலையில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்..

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தலைமைக்காவலர் மற்றும் சிறப்பு எஸ்.ஐயாக பணியாற்றும் பாலு என்கிற பாலசுப்ரமணியன் என்கிற குண்டாஸ் பாலுதான் இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் காவல்துறை பி.ஆர்.ஒ சத்தியநாரயணன் மச்சான் என்பதால் காப்பாற்றப்பட்டு வருகிறார்..
ஜெயராஜ், பென்னீக்ஸ் இருவரை சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் சம்பவம் நடக்கும் இரண்டு நாளுக்கு முன்பு சாத்தான்குளத்தின் ஏன் கடையை மூடவில்லை என்று எஸ்.ஐ. ரகுகணேஷ்(பாஜக ஆதரவு பெற்ற முக்கிய டிவியின் உரிமையாளருக்கு உறவினர் – அவர் யாதவ் பெயரில் கட்சி, அமைப்பு நடத்துகிறார்) கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு செல்கிறார். அங்கிருந்த வியாபாரிகளிடம் ஜெயராஜ் என்ன இப்படி கெட்ட வார்த்தைகளால் திட்டிவிட்டு செல்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்கிறார். ஜெயராஜ் விமர்சனம் செய்யும் போது, குடிபோதையில் அங்கிருந்த தலைமைக் காவலர் கம் சிறப்பு எஸ்.ஐ பாலு செல்போனை ஆன் செய்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ரகுகணேஷ், பாலகிருஷ்ணனுக்கு இருவருக்கும் லைவ் ரிலே செய்கிறார்.

ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் இருவரும், ஆய்வாளர் ஸ்ரீதரிடம், ஜெயராஜ் திட்டுவதை கூறுகிறார்கள்.
ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மூவரும் அணி, ஜெயராஜ் தோலை உரித்து உப்புகண்டம் போட வேண்டும் என்றும் முடிவு எடுக்கிறார்கள்.
ஜெயராஜ், பென்னீக்ஸ் இருவரையும் உப்புகண்டம் போட குறித்த நாளென்று, பாலு லீவு போட்டுவிட்டார்.
ஜெயராஜ், பென்னீக்ஸ் கொலைக்கு தூண்டுதலாக இருந்த பாலு என்கிற பாலசுப்ரமணியன் என்கிற குண்டாஸ் பாலு சம்பவம் நடந்த அன்று பணிக்கு வராத காரணத்தால், தப்பித்திவிட்டார்.
முக்கிய குற்றவாளியான பாலு, தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ சத்தியநாராயணனின் மச்சான் என்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் மாற்றும் போது, காவல் துறை பி.ஆர்.ஒ சத்தியநாராயணன், தன் மச்சான் பாலுவை தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, சத்தமில்லாமல் காப்பாற்றிவிட்டார்..
சாத்தான்குளம் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ பாலு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பி.ஆர்.ஒ சத்தியநாராயணனால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னீக்ஸ் கொலை வழக்கில் சிறப்பு எஸ்.ஐ கம் குண்டாஸ் பாலு தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும்..
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஐ.பி.எஸ் மற்றும் சிபிசிஐடி ஐ.ஜி ஸ்ரீதர் ஐ.பி.எஸ் இருவரும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ பாலுவை கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..