
தாம்பரம் பெரு நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையர் பொறுப்பு பதவியில் இருந்த கருப்பையாராஜா, செயற்பொறியாளர் பதவி உயர்வை விலைக்கு வாங்கி, நகராட்சி நிர்வாகத்தின் செங்கல்பட்டு மண்டல பொறியாளர் பதவியில் அமர்ந்தார்.
தாம்பரம் பெரு நகராட்சிக்கு உடனடியாக ஆணையர் ஒருவரை நியமித்து இருக்க வேண்டும். ஆனால் தாம்பரம் பெரு நகராட்சிக்கு ஆணையர் பதவிக்கு ஏலம் நடந்தது. ஏலத்தில் மண்டல பொறியாளர் கருப்பையா ராஜாவே, ஆணையர் பதவியை பல லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.
கருப்பையாராஜாவுக்கு ஏலத்தொகைக்கான பணம் பரிமாற்றம், முடிந்தவுடன், நகராட்சி நிர்வாகம் ஆணையர் கம் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் மன்னர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநர் அசோகன், கருப்பையாராஜாவை, தாம்பரம் பெரு நகராட்சியின் ஆணையர் பொறுப்பில் நியமித்து, ஆர்.ஒ.சி எண்.3199/2020/சி1-2 தேதி 1.7.2020ல் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே தாம்பரம் பெரு நகராட்சியின் பொறியாளர் மற்றும் ஆணையர் கூடுதல் பொறுப்பில் இருந்த கருப்பையா ராஜா, தற்போது மண்டல பொறியாளர் மற்றும் தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்..
கருப்பையாராஜா மீது மக்கள்செய்திமையம் கொடுத்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் முறைமன்ற நடுவகத்தில் கருப்பையா ராஜா மீது ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சட்டத்துக்கு புறம்பாக கருப்பையாராஜாவுக்கு தாம்பரம் பெரு நகராட்சி ஆணையர் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது..
நகராட்சி ஆணையர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் ஊழலுக்கு அடிமையாகிவிட்டாரா.. நகராட்சிகள் ஊழலுக்கு நேந்துவிட்டாச்சா?
திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிவிட்டு, நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநராக கொடிக்கட்டி பறக்கும் அசோகனின் ஊழல் கூத்துக்கள் நாளை முதல் வெளியாகும்…