
சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்ட நிலையில் மின்னல் வேகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவி வருகிறது. சென்னையில் கொரோனா சமூக பரவலாக மாறுகிறது என்பதை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் சுகாதாரத்துறை செயலாளராக மாறுதல் செய்யப்பட்டப்பிறகு, சென்னை மாநகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். அதே போல், கொரோனா சிறப்பு அதிகாரிகளுக்கும், பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட சிறப்பு அதிகாரிகள் அனைவரும் கொரோனா பணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள். அதனால் கொரோனா போலி பில் கொள்ளை மட்டும் சத்தமில்லாம் தினமும் நடந்து வருகிறது.
ஊரடங்கு உத்தரவு அமுல் செய்யப்பட்டு நிலையில் 1.7.2020 மட்டும் 2182 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று பரவியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் ஆரம்ப சுகாதார மருத்துமனைகளுக்கு டாக்டர்கள், நர்சுகள் வருவதில்லை. கொரோனா சிறப்பு முகாம் பெயரில் வெளியே போய்விடுகிறார்கள். அதனால் கொரோனா இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கு வழக்கமாக மாத்திரை கொடுப்பது நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது.
மண்டலம் -5ல் பெருமாள் கோயில் தோட்டம் கொரோனா சிறப்பு முகாமில், எந்தவித வசதி இல்லாமல், வெட்ட வெளியில் சட்டத்துக்கு புறம்பாக கொரோனா ஆய்வு செய்யப்படுகிறது.(வெட்ட வெளியில் கொரோனா டெஸ்ட் எடுக்கும் படங்களுடன் மக்கள்செய்திமையம் மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர்க்கு புகார் அனுப்பி உள்ளது.


அமைச்சர் ஜெயக்குமார் கலந்துக்கொண்ட சிறப்பு மருத்துவ முகாமில் சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை. சமூக இடைவெளி இல்லாமல் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்துக்கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவுகிறது என்பது உண்மை.
சென்னை மாநகராட்சியில் மண்டலம் – 4,6,7,8 உள்ளிட்ட பல மண்டலங்களில் சமூக இடைவெளி இல்லாமல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதால் கொரோனா சமூக பரவலாகி உள்ளது. மண்டலங்களில் விதிமுறைகளை மீறி வெட்ட வெளியில் கொரோனா ஆய்வு நடத்தப்படுகிறது.
சென்னையில் சுமார் 10மண்டலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை எடுக்காமல், கொரோனா சிறப்பு முகாம், சிறப்பு மருத்துவ முகாம் பெயரில் தினமும் கொரோனா கூத்துகள் அரங்கேறி வருகிறது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு எதைப்பற்றி கவலை இல்லை. தினமும் கிருமி நாசினி கமிசன் மற்றும் சுகாதார ஊழியர்கள், நர்சுகள் மற்றும் கொரோனா பணியில் ஈடுபடுபவர்கள் உணவு சப்ளை கமிசன் என்று தலைமைப் பொறியாளர்களின் கமிசன் கொள்ளையை குளு குளு அறையிலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்…

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு வாழ் மக்கள், இனி தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும், சென்னை மாநகராட்சியை நம்பாமல் கொரோனாவுடன் வாழ பழகிக்கொண்டு, வயிற்று பொழப்புக்காக பணம் சம்பாதிக்கும் பணிக்கு போக வேண்டியதுதான்…வேறு வழியில்லை.
சென்னை மாநகராட்சியில் நிர்வாக கட்டிடத்தை அம்மா மாளிகை என்று அழைக்காமல் அதிகாரிகள் கொரோனா மாளிகை என்று அழைக்க தொடங்கிவிட்டார்கள்..
சென்னை மாநகராட்சியில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவுவதை தலைமைச் செயலாளர் சண்முகம் ஐ.ஏ.எஸ்யும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.